கேரமல் பிரட் புட்டிங் செய்யலாமா..!
தேவையான பொருட்கள்:
சர்க்கரை – 1/2 கப்
பிரட் – 6 துண்டுகள்
கஸ்டர்டு தூள் – 2 மேசைக்கரண்டி
வெனிலா எசென்ஸ் – ½ தேக்கரண்டி
தண்ணீர் – 1/2 கப்
பால் – 1 1/2 கப்
சர்க்கரை – 1/2 கப்
செய்முறை:
ஒரு பாத்திரத்தில் சர்க்கரை சேர்த்து பாகு தயாரித்து அதனை ஒரு தட்டில் ஊற்றிக் கொள்ள வேண்டும்.
ஒரு சிறிய கிண்ணத்தில் கஸ்டர்டு தூளுடன் பால் சேர்த்து கரைத்து வைத்துக் கொள்ளவும்.
பிரட் துண்டுகளின் ஓரங்களை நறுக்கி விட்டு அதனை மிக்ஸியில் போட்டு பொடித்துக் கொள்ளவும்.
அந்த தூளை சூடான பாலில் சேர்த்து கரைத்துக் கொள்ளவும்.
மேலும் இதனுடன் வெனிலா எசென்ஸ்,பாலுடன் கரைத்த கஸ்டர்ட் தூள்,சர்க்கரை சேர்த்து கலந்துக் கொள்ளவும்.
இக்கலவையை சர்க்கரை பாகு ஊற்றி வைத்திருக்கும் கலவையில் ஊற்றி பாயில் பேப்பர் வைத்து மூடி வைக்கவும்.
ஒரு அகலமான பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அதில் இந்த கலவை உள்ள தட்யை வைத்து மூடி 30 நிமிடங்களுக்கு வேகவைக்கவும்.
பின் இதனை ஃபிரிஜ்ஜில் வைத்து நான்கு மணி நேரத்திற்கு குளிரவைக்க வேண்டும்.
அவ்வளவுதான் கேரமல் பிரட் புட்டிங் தயார்.