ஈசியா நீங்களும் சமையல் ராணி ஆகலாம்..!
வாழைக்காய் பொரியலை துருவி செய்யும்போது அதனுடன் சிறிது இஞ்சியும் கேரட்டும் துருவி சேர்க்க சுவை அதிகமாக இருக்கும்.
போளி செய்யும்போது கடலை பருப்புடன் வேகவைத்த சர்க்கரைவள்ளி கிழங்கு, தேங்காய்த்துருவல், ஏலக்காய்த்தூள் சேர்த்து செய்ய சுவை அதிகமாக இருக்கும்.
முட்டைகோஸின் தண்டு பகுதியை கீழே வீணாக போடாமல் அதனை சாம்பாரில் சேர்த்து சமைத்து சாப்பிட சுவையாக இருக்கும்.
சமைக்கும்போது சில்வர் கரண்டிக்கு பதிலாக மரக்கரண்டிகளை பயன்படுத்துவதினால் கிளறுவது சுலபமாகும், பாத்திரத்திலும் கோடுகள் விழாது, கைகளிலும் சூடு படாமல் சமைக்கலாம்.
மது அருந்துதல் புகை பிடித்தல் ஆகிய தீய பழக்கங்களை பின்பற்றுபவர்கள் தினமும் ஒரு எள் உருண்டையை சாப்பிட்டு வர உடலில் இருக்கும் நச்சுப் பொருட்கள் வெளியேற உதவியாக இருக்கும்.
பிரண்டையை நல்லெண்ணெயில் வதக்கி பின் புளி, உப்பு, காரம் சேர்த்து துவையல் செய்து சாப்பிட மூளை நரம்புகள் பலமாகும்.
கத்தரிக்காய் பொரியலில் கொஞ்சமாக கடலை மாவினை தூவி செய்ய சுவை அதிகமாக இருக்கும்.
சமைக்கும்போது கையில் சூடு பட்டுவிட்டால் உடனே அந்த இடத்தில் பீட்ரூட் சாற்றை தடவி வர கொப்பளம் வராது.
கறி மென்மையாகவும் மிருதுவாகவும் இருக்க தயிர், உப்பு சேர்த்து ஊறவைத்து பின் சமைக்க சுவை அதிகமாக இருக்கும்.
எண்ணெய் பலகாரமான வடை, பஜ்ஜி ஆகியவை செய்யும்போது எண்ணெய் அதிகமாக குடிக்காமல் இருக்க எண்ணெய் ஊற்றி சூடாகும் சமையத்தில் அதில் கொஞ்சம் உப்பு சேர்த்தால் பலகாரங்களில் எண்ணெய் குடிக்காது.