மூக்கின் ஓரங்களில் இருக்கும் கருமையை நீக்க எளிய குறிப்புகள்..!
பலருக்கும் மூக்கின் ஓரங்களில் கருமை நிறம் படிந்திருக்கும் இதனை சரிச்செய்ய நாம் வீட்டில் இருக்கும் சில பொருட்களை பயன்படுத்தியே சரிசெய்யலாம், அவற்றை பார்க்கலாம் வாங்க..
கற்றாழை:
கற்றாழையை வெட்டி அதில் இருக்கும் ஜெல்லை எடுத்து மூக்கின் ஓரங்களில் தடவி காயவிட்டு பின் நீரில் அலசி வர நல்ல மாற்றம் தெரியும் இதனை வாரம் இரண்டு மூன்று முறை என பயன்படுத்தி வரலாம்.
எலுமிச்சை:
எலுமிச்சை பழத்தை பாதியாக வெட்டி அதனை மூக்கின் மீது மற்றும் ஓரங்களில் கருமையாக இருக்கும் இடத்தில் ஸ்கரப் செய்து வந்தால் கருமை மறையும். இதில் இருக்கும் வைட்டமின் சி நன்றாக வேலை செய்யும், இதனை வாரத்திற்கு இருமுறை செய்து வரலாம்.
தக்காளி:
தக்காளியானது இயற்கையான ப்ளீச்சிங்காக செயல்படும். இதனை வெட்டி மூக்கின் ஓரத்தில் தடவி உலர்வைத்து நீரில் கழுவி வரலாம். இதனை தொடர்ந்து செய்து வர கருமை மெதுமெதுவாக மறையும்.
முட்டை:
முட்டையில் இருக்கும் வெள்ளை கருவில் சிறிது தேன் கலந்து மூக்கின் ஓரங்களில் இருக்கும் கருமையான இடத்தில் தேய்த்து காயவைத்து கழுவி வந்தால் கருமை நீங்கும். இதனை தினமும் பயன்படுத்தலாம்.
தயிர்:
தயிரில் இருக்கும் லாக்டிக் அமிலம் சருமத்தில் தடவும் போது அங்கிருக்கும் கருமையை மறைத்து சருமத்தை பொலிவாக்கும். இதனை வாரத்தில் இரண்டு நாட்கள் என பயன்படுத்தலாம்.
வினிகர்:
வினிகருடன் தயிர் அல்லது தண்ணீர் சேர்த்து கலந்து கண்களில் படாமல் மூக்கின் மீது மற்றும் மூக்கின் ஓரங்களில் தடவி வந்தால் கருமை நிறம் மறையும்.
தேன்:
தேனை சிறிது எடுத்து கருமையான இடத்தில் தடவி உலரவைத்து கழுவினால் நல்ல மாற்றம் கிடைக்கும்.
ஆரஞ்சு பழம்:
ஆரஞ்சு பழ சாறுடன் சிறிது மஞ்சள்தூள் சேர்த்து கலந்து இரவில் கருமை இருக்கும் மூக்கின் ஓரங்களில் தடவி மறுநாள் நீரில் கழுவி வரலாம். தொடர்ந்து செய்ய நாளைவில் கருமை நிறம் மறையும்.
தேங்காய் எண்ணெய்:
எலுமிச்சை சாறுடன் தேங்காய் எண்ணெய் கலந்து தினமும் இரவில் தடவி அப்படியே விட்டு மறுநாள் அலசி வர கருமை மறையும். இதனை ஒருநாள் விட்டு ஒருநாள் செய்து வரலாம்.