இரயில் வழித்தடங்கள் மாற்றம்…!! தெற்கு இரயில்வே அறிவிப்பு…!! எந்தெந்த வழித்தடங்களில் தெரியுமா..?
சென்னையில் கனமழை காரணமாக நேற்று இரயில்கள் ரத்து செய்யப்பட்ட நிலையில் இன்று அவை வழக்கம் போல் இயங்கும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
சென்னையில் நேற்று முன்தினம் இரவு முதல் பெய்து வரும் கனமழையால் பேசின் பிரிட்ஜ் பாலம், வியாசர்பாடி, மற்றும் மாம்பலம் உள்ளிட்ட இரயில்வே பாலங்கள் வெள்ளத்தில் மூழ்கியது. எனவே சென்னை சென்ட்ரல், மற்றும் எழும்பூரில் இருந்து நேற்று இரவு புறப்பட்ட இரயில்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டது.
அதேபோல் இன்று காலை சென்னை சென்ட்ரலில் இருந்து அதிகாலை புறப்பட இருந்த இரயில்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டது., இதனால் பயணிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகி இரயில்வே அதிகாரிகளுடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்.. முன்னறிவிப்பு இன்றி இரயில்கள் ரத்து செய்யபட்டால் எங்களால் எப்படி பயணம் மேற்கொள்ள முடியும் என கூச்சலிட தொடங்கினர்.
அதன் பின்னர் மாற்று வழித்தடத்தில் இரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவிப்பை வெளியிட்டிருந்தது. அதேசமயம் தென்மேற்கு வங்கக் கடலில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டல பகுதியில் தெற்கு ஆந்திராவை நோக்கி மழை சென்றுள்ளதால். சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை குறைந்துள்ளது..
மேலும், பேசின் பிரிட்ஜ், வியாசர்பாடி, மற்றும் மாம்பலம் இ ரயில் நிலையத்துக்கு இடையே உள்ள பாலத்தில் இருந்த மழை நீர் சீரமைக்கப்பட்டதால், இரயில்கள் வழக்கம்போல் இயங்கும் என தெற்கு இரயில்வே தெரிவித்துள்ளது..
இரயில் வழித்தடங்கள் மாற்றம் :
சென்னையில் இருந்து கோயம்பத்தூருக்கு இன்று காலை 6 மணிக்கு புறப்பட இருந்த கோவை எக்ஸ் பிரஸ், காலை 10 மணிக்கு சென்னை கடற்கரை இரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டது.
அதேபோல் திருவனந்தபுரம் விரைவு ரயில், மும்பை சிஎஸ்டி விரைவு ரயில் மற்றும் வெஸ்ட் கோஸ்ட் விரைவு இரயில்கள் இன்று மதியம் முதல் சென்னை சென்ட்ரலில் இருந்து புறப்படும் என தெரிவித்துள்ளது.
சென்னை எழும்பூரில் இருந்து டெல்லி செல்லும் எக்ஸ்-பிரஸ் ரத்து செய்யபட்ட நிலையில் மீண்டும் இன்று இரவு முதல் இயங்கும் என தகவல் வெளியாகியுள்ளது..
அதேபோல் மைசூரில் – இருந்து சென்னை சென்ட்ரல் வந்தடையும் காவேரி எக்ஸ்-பிரஸ் முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..