ஒரு இனம் புரியாத மகிழ்ச்சி தோன்றும் இவரின் பாடல்களை கேட்டால்..!
பின்னணி பாடகர் உமா ரமணன் இவர் இசை மீது கொண்ட காதலால் பாடல் கற்றுக்கொண்டார் கல்லூரி படிக்கும் போது பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு பலராலும் பாராட்ட பட்டவர்.
பின்னர் இவர் தொலைக்காட்சி தொகுப்பாளரும், நடிகரும், மட்டும் மேடைப் பாடகருமான ஏ.வி. இரமணனைச் சந்தித்தார். இருவரும் மேடை கச்சேரியில் இணைந்து பாடினார்கள், அவரையே திருமணமும் செய்து கொண்டார்.
இவர்களுக்கு ஒரு மகனும் இருக்கிறான், அவரும் இசைக்கலைஞர் தான் 69 வயதாகும் இவர் இன்று காலமானார். பிரபலமான இசை கலைஞர்களுடன் இணைந்து பட்டியிருக்கிறார். தமிழ் சினிமாவில் நூற்றுக்கு மேற்பட்ட பாடல்கள் பாடியிருக்கிறார். இன்றும் பலபேரின் வீடுகள் ஆகட்டும் கல்யாண வீடுகள், பயணத்தின் போது பேருந்துகளிலும் ஒளித்து கொண்டிருக்கும்.
இவர் பாடிய பாடல் ஏதோ தெரியவில்லை அந்த பாடல்களை கேட்கும் பொழுது மனதில் ஒரு இனம் புரியாத மகிழ்ச்சி தோன்றும். இதழின் ஓரம் ஒரு சிறு புன்னகை மலரும் நீங்களும் அந்த உணர்வை உணர்ந்தது உண்டா..?
இவருக்கு இப்படி ஒரு குரலா என்று ஆசிரியம் படும் வைகையில் “கேளடி கண்மணி” திரைப்படத்தில் வரும் “நீ பாதி நான் பாதி கண்ணே” இந்த வரியை பார்த்ததும் உங்களுக்கு அந்த பாடல் நினைவில் வந்துவிடும் வாலி அவர்கள் பாடல் எழுத இசையமைப்பாளர் இளையராஜா இசையில் பாடகர் கே.ஜே. யேசுதாஸ் மற்றும் பாடகி உமா ரமணன் இருவரும் இணைந்து பாடிய பாடல் இது..
நீ என்பது நீ மட்டும் அல்ல அதில் பாதி நானும் இருக்கிறேன், நீ என் பக்கத்தில் இல்லை என்றால் எனது கண்கள் இரண்டும் தூங்காது, இருள் சூழ்ந்தாலும் நிழலாக நான் உன்னை தொடர்ந்து வருவேன் .
அருகில் நீயின்றி தூங்காது கண்ணே…..
இடது விழியில் தூசி விழுந்தால் வலது
“வைதேகி காத்திருந்தாள்” படம் எத்தனை முறை தொலைக்காட்சியில் பார்த்தாலும் சலிக்காத படம் என்று சொல்லலாம் அதில் நடித்த நடிகர்களும் சரி பாடலும் சரி இன்று வரை பேசிக்கொண்டு தான் இருக்கிறார்கள்.
இந்த படத்தில் வரும் “மேகங்கருக்கயிலே” இந்த பாடலை பஞ்சு அருணாசலம் எழுத இசை அமைப்பாளர் இளையராஜ இசை அமைத்து பாடலும் பாடிருப்பார். உடன் இவரும் சேர்ந்து பாடிய பாடல் இது.
மேகம் கருத்து கொண்டிருக்கு என் உடம்பு முழுவதும் குளிர்கிறது. நம் இருவரும் சேர்ந்து ஆற்றங்கரையே கடந்திரலாம், எத்தனை நாளாக காத்திருந்தேன் நான் கண்ட கனவுகளோடு கடவுள் யாருக்கு யார் என்று சேர்த்து வச்சான் இப்போ அதை நிறைவேற்றி விட்டான், இருவரும் தன்னுடைய கல்யாணத்தின் பாதையே பாடலாக பாடியிருப்பார்.
என்னென்ன கனவுகள் கண்டிருந்தா………
என்னிடம் நீ பேச வேண்டும் கச்சேரி பாட வேண்டும் என்று தலைவன் காதலியை வம்பிழுத்து பாடும் பாடல் இது, அடியே நீ என்னுடன் சேர்ந்து கச்சேரி பாடாமல் எங்கு செல்கிறாய் “கஸ்தூரி மானே கல்யாண தேனே” என்ன மாதிரி ஒரு ராகம் நிறைந்த பாடல் வரிகள் இந்த பாடலை இளையராஜா இசையில் பாடகர் கே. ஜே. யேசுதாஸ் மற்றும் உமா ரமணன் இருவரும் இணைந்து பாடிய பாடல்.
கச்சேரி பாடு வந்து கைத் தாளம் போடு…..
ஜாதிப்பூவை நெஞ்சோடு நீ சேர்த்து
எப்போ கேட்டாலும் வைப் பண்ண வைக்குற பாடல் இது, இந்த பாடலும் இவங்க பாடுனதுதான ஆமாங்க “கண்ணும் கண்ணும் தான் கலந்தாச்சி” இளைய தளபதி விஜய், திரிஷா இணைந்து நடித்த திருப்பாச்சி படத்தில் உமா ரமணன், ஹரிஷ் ராகவேந்திரன் இருவரும் இணைந்து வைப்பில் கொண்டு சென்ற பாடல்.
பத்து மாதம் தாய் வயிறில் இருந்து வந்த நான் இனி மொத்த காலமும் உன்னுடன் சேர்ந்து வாழப்போகிறேன், நான் பிறக்கும்போது பெண்ணாக இருந்தேன் உன்னால்தான் நான் தாயாக போகிறேன்.
பத்து மாதம் தான் தாய் வயிற்றில்
இனி மொத்த காலம் தான் உன்னிடத்தில்
பிறக்கும் போது தான் பெண்ணானேன்
பொன் மானே என் மீது உனக்கு என்னடி கோவம் உன்னை காவல் காப்பவன் நான் ஏன் என்னை கைதியாக பார்க்கிறாய். நம் இரண்டு பேரின் கண்களும் கோவம் கொள்ளலாமா கமல்காசன், ரேவதி இருவரும் நடித்த படம் “ஒரு கைதியின் டைரி” திரைப்படத்தில் வரும் “பொன் மானே.. கோபம்.. ஏனோ” இந்த பாடலுக்கு வைரமுத்து வரிகள் எழுத இசையமைப்பாளர் இளையராஜா இசை அமைக்க பாடகர் உன்னி மேனன், உமா ரமணன் இருவரும் இணைந்து பாடிய பாடல் இது.
பார்வை பூவை நெஞ்சில் வீசு.. ஓஹோ…..
இன்றைக்கு அவர் மறைந்தாலும் காலம் உள்ளவரை அவரின் குரலின் மூலம் பாடிய பாடல்கள் எல்லா இடத்திலும் ஒளித்து கொண்டு இருக்கும் இவர் பாடிய பாடல்களில் உங்களுக்கு மிகவும் பிடித்த பாடல் எது..?
-சரஸ்வதி