அன்புவின் அழகிய கதை – குட்டிஸ்டோரி-42
நகரத்தின் வாழ்க்கையை வாழ்வதற்கு கிளம்பினாள் அன்பு. அவளின் பயணத்தை பார்ப்போம் ஒரு சிறிய கிராமத்தில் அப்பா விவசாயம் செய்கிறார் அம்மா அவருக்கு உதவியாக இருக்கிறார்.
இவளுக்கு இரண்டு தங்கைகள் என சந்தோஷமான சூழலில் வாழ்ந்தவள் தான் அன்பு என்ன தான் மிகவும் கஷ்டப்படும் குடும்பமாக இருந்தாலும், அளவில்லாத சதோஷத்துடன் தினமும் அவளுடைய நாட்கள் செல்லும்.
பட்டப்படிப்பு முடிந்த பிறகு மெட்ராஸில் இன்டெர்வியூ முடித்து விட்டு ஊருக்கு திரும்பி சென்று கொண்டிருந்தாள்.., வீட்டிற்கு வந்து அம்மாவுடன் தனது வயல் வேலைகளை செய்வாள் தங்கைகளை படிக்க வைப்பாள் இப்படியே நாட்கள் சென்றன.
ஒருநாள் போஸ்ட் மேன் வந்து கடிதம் ஓன்று கொடுத்தார், அதில் அவளுக்கு மெட்ராஸில் வேலை கிடைத்தது. அந்த கம்பெனியில் இருந்து வந்த கடிதம் அதை பார்த்ததும் வீட்டில் இருந்த அனைவருக்கும் ஒரே சந்தோசம் நம்ப பொண்ணுக்கு வேலை கிடைத்துவிட்டது. என்று
ஆனால் அன்பு வெளியில் சந்தோசமாக இருக்குற மாதிரி நடிச்சாலும் மனதிற்குள் ஒரு பயம் கொண்டு இருந்தால். இங்கிருந்து சென்று விட்டால் என் அம்மா, அப்பாவிற்கு உதவிட முடியாது தங்கைகளுக்கு படிப்பு சொல்லி கொடுக்க முடியாது.
இந்த இயற்கையான சூழலில் இருந்து நான் போக வேண்டுமா என்று மனதிற்குள் நினைத்தால். அப்பா, அம்மா முகத்தில் இருக்கும் பூரிப்பை பார்த்து அந்த வேலைக்கு செல்ல முடிவு எடுத்தால். அனைவரும் சந்தோசமாக அன்பை வழி அனுப்பி வைத்தார்கள்.
முதல் முதலில் தன்னுடைய ஊரை விட்டு வெளியே சென்று திக்கு தெரியாமல் முழித்து கொண்டு இருந்தால், வந்ததும் அந்த கம்பெனிக்கு சென்று மேனேஜரிடம் பேசிவிட்டு எனக்கு இங்கு யாரையும் தெரியாது உதவி செய்வீர்களா..? என்று கேட்க அவரும் கண்டிப்பாக செய்கிறேன் என்று அவளுக்கு தேவையான அணைத்து வசதிகளும் செய்து கொடுத்தார்.
இந்த ஊரின் பழக்கவழக்கங்கள் முதல் நடைமுறை வரை அனைத்தையும் சொல்லி கொடுத்தார். இப்படி ஒரு மனிதர் உங்கள் வாழ்க்கைளிலும் யாரது இருக்காங்களா..?
சில சமயங்களில் நமக்கு தெரிந்தவர்கள் கூட உதவமாட்டார்கள் தெரியாத மனிதர்கள் உதவி செய்வார்கள். எல்லாரையும் நம்பிட முடியாது கவனமாக இருங்கள்.
முதலில் உங்களை நீங்க பாதுகாப்பாக பார்த்துக்கொள்ளுங்கள். எல்லாரும் நல்லவர்களும் இல்லை கெட்டவர்களும் இல்லை சூழ்நிலை காரணங்களில் மனிதர்கள் மாற்றப்படுவார்.
-சரஸ்வதி