மிடில் க்ளாஸ் வாழ்க்கையை மாற்ற இதை பண்ணுங்க போதும்..!!
மா.. என்கிட்ட காசு இல்லமா..
நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவர்களால் இந்த வார்த்தையை கடக்காம வந்திருக்கவே முடியாது.. அனைத்து சூழலிலும் சொல்லிட்டே இருக்கே வார்த்த காசு இல்ல மா..
காசு இல்லன்னு சொல்லும் போது வரும் குரல் கழுத்தை நெரிக்குற மாதிரி இருக்கும்.., கடைசியில அந்த வார்த்தையில அவ்ளோ அழுத்தம் இருக்கும் ..
சுலபமா சொல்லிடலாம், காசு இல்லை என்றதெல்லாம் ஒரு பிரச்சனையா..? சந்தோஷமா வாழ்றதுக்கு பணம் முக்கியமே இல்ல அப்டி இப்டின்னு..
ஆனா, அஞ்சு ரூபா இல்லாம WhiteBoard பஸ் காக வெயிட் பண்ணி இன்டெர்வியூ தவற விடுற அப்போ ஏற்படுற வலி எல்லாம் என்னைக்குமே மாறவே மாறாது..
காலையில சாப்பிட காசில்லாமா மதியானம் வர தூங்குறதெல்லாம் வேலை தேடி அலைஞ்சப்ப நிகழ்ந்த சரித்திர குறியீடுகள்..
கனவு முக்கியம் தான்.. ஆனா அதைவிட குடும்பம் முக்கியம்.., ஒரு வேளையாச்சும் நல்ல சாப்பாடு.. கஷ்டப்பட்டு படிக்க வச்ச மொத்த குடும்பமும் பசியில் இருக்கும் போது, நான் என் கனவை நோக்கி போறேன் அப்படின்னு எந்த ஒரு மிடில் கிளாஸ் பையனாலயும், பொண்ணாலயும் சொல்ல முடியாது..
கனவுதான் பெரிசு அத யாரும் மறுக்கவே முடியாது.. ஆனா, அந்த கனவை நோக்கி ஓடறதுக்கு காசு பிரச்சனையா இருக்க கூடாது. அதுக்காகவாச்சும் நாலு காசு சம்பாதிக்கணும்..
பின்னாடி வாழக்கையில ஒரு கட்டத்துல ஏசி பஸ்ல போற அளவுக்கு காசு இருக்கலாம், 5 ஸ்டார் ஹோட்டல்ல சாப்பிடுற அளவுக்கு பணம் இருக்கலாம்.. ஆனா ஒரு நேரத்துல காசு இல்லாம அலைஞ்சு அவமானப்பட்டு நின்ன அந்த வலிகளுக்கு மருந்தே கிடையாது..
சில நேரம் படிப்பு கொடுக்கிற தைரியத்தை வேற யாராலயும் தர முடியாது, சில நேரம் அப்பாவோ Friends குடுக்குற தைரியத்தைவேற யாராலயும் கொடுக்க முடியாது, நிறைய நேரம் காசு கொடுக்கிற தைரியத்த வேற எதுவும் தர முடியாது..
சந்தோஷமாக வாழ்றதுக்கு காசு எல்லாம் முக்கியமே இல்ல சொல்றவங்க சொல்லிட்டே இருக்கட்டும்..
ஆனா, இங்க சாதாரண வாழ்க்க வாழ்றதுக்கே காசு முக்கியம்..
அதை மறுக்காதீங்க..
நல்ல சம்பாதிக்கணும்.., நல்லா வாழணும்.
எங்க காசில்லாம அவமானப் பட்டமோ அங்கேயே எவ்ளோ காசும் வேணும்ன்னு கேக்குற அளவுக்கு, நாம்ப முன்னேறணும்..,
இந்த காசு போததுன்னு இப்போ நாம்ப சொன்னாலும், இதெல்லாம் ஒரு காசான்னு எடுத்து கொடுக்குற அளவுக்கு.. நல்ல சம்பாதிக்கணும். வாழ்க்கையில் ஜெயிக்கணும் சாதிக்கணும் என்ற எண்ணம் எல்லாருக்கும் இருக்கும்.
ஆனா அதை நம்ப செயலை காட்டனும் செய்யுற எந்த வேலையும் கேவலம் இல்லனு நினைக்கும் உழைப்பால் உயரமும் நினைச்ச அப்புறம்.., மனதில் உறுதி இருந்தாலே போதும்…
-வீர பெருமாள் வீர விநாயகம்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..