சிறுநீரக, கல்லீரல் பிரச்சனையா அப்போ இந்த பதிவு உங்களுக்கு தான்..!!
வைட்டமின் டி எவ்வளவு முக்கியம் – பற்றாக்குறை வரும்போது ஏற்படும் ஆபத்துகள் என்ன தவிர்ப்பது எப்படி வைட்டமின் டி அல்லது சூரிய வைட்டமின் என்று அழைக்கப்படும் இந்த ஊட்டச்சத்தை, மற்ற ஊட்டச்சத்துக்களை போல் உணவில் அதிக அளவில் பெற முடியாது.
இந்தியர்களுக்கு கிட்டத்தட்ட 76 சதவீதம் வைட்டமின் டி குறைபாடு உள்ளது ஆய்வுகளின் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது. வைட்டமின் டி குறைபாட்டால் ஏற்படும் பிரச்சனைகள் குறித்து தெரிந்து கொள்வோம் வாங்க.
வைட்டமின் டி என்பது கொழுப்பில் கரையக்கூடிய ஊட்டச்சத்து ஆகும். உடலின் பல செயல்பாடுகளுக்கு மிகவும் முக்கியமானது இந்த வைட்டமின் டி ஊட்டச்சத்து. காலை நேர சூரிய ஒளியின் மூலம் இதனை நாம் அதிக அளவில் பெற்றுக் கொள்ள முடியும். சூரிய ஒளியில் இருந்து வரும் UV கதிர்களால் உடலின் வைட்டமின் டி தொகுப்பு தூண்டப்பட்டு, உடலின் உள்ளேயே உற்பத்தி செய்யப்படும்
வைட்டமின் டி யின் நன்மைகள் குறித்து பார்க்கலாம் வாங்க :
உங்களின் உடல் கால்சியத்தை உறிஞ்ச வைட்டமின் டி தேவை. கால்சியம் தான் எலும்புகளின் முக்கிய மூலம் ஆகும். கால்சியம் சரியான அளவில் கிடைக்கும் போது, எலும்புகளை வலுவிழக்கச் செய்து அவற்றை சுலபமாக உடையச் செய்யும் ஆஸ்டியோபோரோசிஸ் நோய் தடுக்கப்படும். மேலும், வைட்டமின் டி தான் பாஸ்பரஸின் உற்பத்திக்கும் உதவும்.
வைட்டமின் டியை நம் உடல் சரியான அளவில் பெறும்போது செரிமான மண்டலத்தில் பாஸ்பேட், கால்சியம் போன்ற மற்ற தாதுக்கள் சரியாக உறிஞ்சப்படும். இதன் மூலம் ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியம் மற்றும் உடலுறுப்புகளின் செயல்பாட்டை மேம்படுத்துவதோடு, வலுப்படுத்தவும் முடியும்.
நோய் எதிர்ப்பு அமைப்பை மேம்படுத்த :
வைட்டமின் டி நோய் எதிர்ப்பு மண்டலத்தின் செயல்பாடுகளை மேம்படுத்தவும், உள்ளே இருந்து உங்களை வலிமையாக்கவும், நோய் எதிர்ப்பு மண்டலத்தை தாக்கும் பாக்டீரியாக்கள் மற்றும் வைரஸ்களை அழிக்கவும் செய்யும்.
சூரிய ஒளி அதிகம் கிடைக்காத குளிர் மற்றும் மழை காலங்களில் வைட்டமின் டி அளவு சரியான அளவில் கிடைக்காது. இதனால் தான் மழைக்காலங்களில் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து அடிக்கடி காய்ச்சல் மற்றும் சளி போன்ற தொற்றுகள் ஏற்படும்.
வைட்டமின் டி மூளை ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும். வயதானவர்கள் சரியான அளவில் வைட்டமின் டி எடுத்துக் கொள்வதன் மூலம் மூளையை சுறுசுறுப்பாக வைத்துக் கொள்ள முடியும்.
வைட்டமின் டி குறைபாட்டிற்கான காரணங்கள் குறித்து பார்க்கலாம் வாங்க :
சூரிய ஒளியில் இருந்து விலகி இருப்பது :
வைட்டமின் டியின் இயற்கை மூலமான சூரிய ஒளியில் இருந்து விலகி இருப்பவர்களுக்கு வைட்டமின் டி குறைபாடு ஏற்படும். காலை நேர சூரிய ஒளி உடலில் படும்படி இல்லாமல் வீட்டுக்குள்ளேயே முடங்கி இருப்பவர்களுக்கும் வைட்டமின் டி குறைபாடு உண்டாகும்.
வைட்டமின் டி உணவுகளை தவிர்ப்பது :
வைட்டமின் டி நிறைந்த உணவுகளை சரியாக எடுத்துக் கொள்ளவர்களுக்கு வைட்டமின் டி குறைபாடு ஏற்படும். அதிலும், குறிப்பாக மீன், மாட்டிறைச்சி, முட்டையின் மஞ்சள் கரு போன்றவற்றை சாப்பிடாத சைவப் பிரியர்களுக்கு வைட்டமின் டி குறைபாடு அதிகம் ஏற்படும்.
கிரோன் நோய், சிஸ்டிக் ஃபைப்ரோஸிஸ் மற்றும் செலியாக் நோய் போன்ற மருத்துவப் பிரச்சனைகள் உள்ளவர்கள் உணவின் மூலம் கிடைக்கும் வைட்டமின் டியை உறிஞ்சுவதில் குறைபாடு ஏற்படும்.
சிறுநீரகம், கல்லீரல் பிரச்சனைகள் :
கல்லீரல் மற்றும் சிறுநீரகங்களின் செயல்பாட்டில் மாறுபாடு மற்றும் தாமதம் அல்லது செயலிழப்பு ஏற்பட்டால், அதன் மூலம் உடலில் வைட்டமின் டி குறைபாடு ஏற்படும்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..