அடுத்த முறை இதை முயற்சி செய்து பாருங்க..!
சர்க்கரை பாயாசம் செய்யும்போது அதில் சிறிது சுக்கு பொடி சேர்க்க சுவை கூடிதலாக இருக்கும்.
வெண்டைக்காய் சமைக்கும்போது மூடி போட்டு மூடாமல் சமைத்தால் பச்சை நிறம் மாறாமல் இருக்கும்.
அப்பளம் பொரித்ததும் அப்படியே டப்பாவில் போடாமல் ஒரு கவரில் போட்டு பின் டப்பாவில் போட்டால் நமத்து போகாமல் இருக்கும்.
பயிர் வகைகளை ஊறவைக்க மறந்துவிட்டால் அதனை லேசாக வறுத்து பின் வேகவைக்க சீக்கிரம் வெந்துவிடும்.
தோசைக்கல்லில் தோசை எடுக்க வரவில்லை என்றால் தோசைக் கரண்டியை நீரில் நனைத்து பின் தோசை எடுத்தால் கிழியாது.
தோசை மாவு புளித்துபோய்விட்டால் அதில் வெங்காயம், மிளகாய், தேர்த்து தாளித்து கொட்டி பணியாரம் செய்து சாப்பிடலாம்.
மீன் பொரிக்கும்போது மசாலாவுடன் கொஞ்சமாக ரவையை சேர்த்து கலந்து பொரித்தால் மொறுமொறுவென இருக்கும்.
வெங்காயத்தை லேசான சூடு நீரில் நனைத்து பின் வெட்டினால் கண்கள் எரியாது.
சர்க்கரை நோய் குணமாக தினமும் சிறிது ஆவாரம் பூவை மென்று சாப்பிட வேண்டும்.
பீன்ஸ் மற்றும் அவரை போன்ற காய்கறிகளை வேகவைக்கும்போது அதில் சிறிது எலுமிச்சை சாறு சேர்த்து வேகவைத்தால் சீக்கிரம் வெந்துவிடும்.
வடை செய்யும்போது வடை மாவில் ஒரு துண்டு பன்னீர் வைத்து தட்டி வடை செய்தால் வித்தியாசமான டேஸ்டில் இருக்கும்.
கேரட் நீண்ட நாட்களுக்கு கெடாமல் இருக்க அதன் தலைப்பகுதியை வெட்டி விட்டு வைக்கலாம்.
கீரைகளை வதக்கும்போது கட்டி விழாமல் இருக்க கரண்டியின் அடிப்பகுதியை வைத்து கிளற வேண்டும்.
சர்க்கரை பொங்கல் செய்யும்போது அதில் சிறிது தேங்காய் பால் கலந்து இறக்கினால் சுவை கூடுதலாக இருக்கும்.
இரண்டு உருளைக்கிழங்கை வேகவைத்து அடை மாவில் பிசைந்து விட்டு சுட்டால் அடை பொன்னிறமாகவும் சுவையாகவும் இருக்கும்.
