வரகரிசி மக்காச்சோள வடை ரெசிபி..! ஈவினிங் ஸ்நாக்!
தேவையான பொருட்கள்:
- 3 மக்காச்சோளம்
- 2 கப் வரகு அரிசி
- 1 உருளைக்கிழங்கு
- 1 ஸ்பூன் மிளகாய் தூள்
- அரை ஸ்பூன் மஞ்சள் தூள்
- அரை ஸ்பூன் சீரகம்
- கால் ஸ்பூன் பெருங்காயத்தூள்
- 1 பெரிய வெங்காயம்
- சிறிதளவு பொடியாக நறுக்கிய கொத்தமல்லி, கருவேப்பிலை
- எண்ணெய் தேவையான அளவு
செய்முறை:
முதலில் வரகரிசியை நன்றாக கழுவி அதனை நீரில் இரண்டு மணி நேரத்திற்கு ஊறவைக்க வேண்டும்.
இரண்டு மணி நேரம் ஊறவைத்து அதனை அரைத்துக் கொள்ள வேண்டும்.
ஒரு மிக்ஸியில் மக்காச்சோளத்தை சேர்த்து ஒரு முறை அரைத்துக் கொள்ள வேண்டும்.
அரைத்த மக்காச்சோளத்தை அரைத்த வரகரிசியில் சேர்த்து கலந்துக் கொள்ள வேண்டும்.
பின் அதனுடன் மஞ்சள்தூள், சீரகம், மிளகாய்த்தூள், பெருங்காயத்தூள், பொடியாக நறுக்கிய வெங்காயம், கொத்தமல்லி மற்றும் கறிவேப்பிலை மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து கலந்துக் கொள்ள வேண்டும்.
இந்த மாவில் வேகவைத்த உருளைக்கிழங்கை மசித்து சேர்த்து கலந்துக் கொள்ளவும்.
ஒரு வாணலை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடாக்கவும்.
மாவில் உருண்டைகளாக எடுத்து தட்டையாக தட்டி அதனை எண்ணெயில் சேர்த்து பொன்னிறமாக பொரிக்கவும்.
பின் மற்றொரு பக்கம் திருப்பிப் போட்டு சிவக்க பொரித்து எடுக்கவும்.
அவ்வளவுதான் வரகரிசி மக்காச்சோள வடை தயார்.
வடைகளில் எத்தனையோ செய்து சாப்பிட்டு இருப்போம் ஆனால் இந்த மாதிரி என்று வரகரிசியை வைத்து மக்காச்சோளம் சேர்த்துவடை செய்து வீட்டில் உள்ளவர்களுக்கு செய்து கொடுங்க உண்மையிலேயே அசந்து போய்டுவாங்க.
