எலக்ட்ரிக் பிரஷ் vs சாதாரண பிரஷ் எது சிறந்தது..?
பற்களை சுத்தமாக வைத்துக் கொள்வது என்பது நம் ஆரோக்கியத்திற்கு மிகவும் முக்கியமான ஒன்றாகும். பற்கள் அழகாகவும் ஆரோக்கியமாகவும் இருந்தால் தான் நாம் நம்பிக்கையுடனும் பேசவும் முடியும். பற்களை சுத்தம் செய்வதற்கு சாதாரண பிரஷ் மற்றும் எலக்ட்ரிக் பிரஷ் என இருவகை முக்கியமானவை. இவை இரண்டில் எது சிறந்த வகை என நாம் தெரிந்துக் கொள்வது என்பது முக்கியமானது.
சாதாரண பிரஷ்:
சாதாரண பிரஷ் என்பது வழக்கமாக நாம் அனைவரும் பயன்படுத்தும் ஒரு வகையாகும். சாதாரண பிரஷ் மூலம் பற்களின் மேல் கீழ் என சுத்தம் செய்வது சாதாரண பிரஷ் வகையாகும்.
சாதாரண பிரஷின் தீமைகள்:
சாதாரண பிரஷை சரியான முறையில் பயன்படுத்தவில்லை எனில் அது பற்களின் மேல் இருக்கும் எனாமலை அரிக்கலாம். இந்த வகை பிரஷின் மூலம் அனைத்து இடங்களையும் சுத்தம் செய்ய முடியாது. சாதாரண பிரஷ் பயன்படுத்துவது ஒரு கட்டத்திற்கு மேல் ஒருவித சலிப்பை ஏற்ப்படுத்தும்.
சாதாரண பிரஷின் நன்மைகள்:
சாதாரண பிரஷ் எங்கும் எளிமையாக வாங்கலாம். இதன் விலையும் மலிவாக கிடைக்கும். இதனை பயன்படுத்துவதும் எளிது.
எலக்ட்ரிக் பிரஷ்:
எலக்ட்ரிக் பிரஷ் என்பது மின்சார சக்தியை பயன்படுத்தி பற்களை சுத்தம் செய்யும் ஒரு வகையாகும். இந்த முறையில் பற்களை சுத்தம் செய்யும்போது பல நன்மைகள் உள்ளது.
எலக்ட்ரிக் பிரஷின் தீமைகள்:
எலக்ட்ரிக் பிரஷின் விலையும் அதிகம். இதில் பற்களை சுத்தம் செய்ய கற்றுக் கொள்ள வேண்டும். முக்கியமானது மின்சாரம் இருந்தால் மட்டுமே இந்தவகை பிரஷ் பயன்படுத்த முடியும்.
எலக்ட்ரிக் பிரஷின் நன்மைகள்:
எலக்ட்ரிக் பிரஷ் மூலம் பற்களை மிகவும் சுத்தம் செய்யலாம். இந்த வகையில் பற்களின் அனைத்து பகுதிகளையும் சுத்தம் செய்து கொள்ளலாம். சிலருக்கு எலக்ட்ரிக் சாதனங்களை பயன்படுத்துவது பிடித்தமானது அதுபோல இந்த எலக்ட்ரிக் பிரஷில் பற்களை சுத்தம் செய்வதற்கு ஆர்வமாக இருக்கும். இதில் பற்களை சுத்தம் செய்யும் நேரமும் குறைகிறது.
எது சிறந்தது..?
இவை இரண்டிற்கு தனிப்பட்ட நன்மை, தீமை இருக்கிறது. எது சிறந்தது என்பது நமது வசதிகளுக்கு ஏற்ப தனிப்பட்ட விருப்பமாகும்.
- உங்களுக்கு விலை குறைவாகவும் எளிமையாகவும் கிடைக்கும் பிரஷ் தேவை என்றால் அதற்கு சாதாரண பிரஷ் ஏற்றது.
- பற்களை முழுவதும் சுத்தம் செய்ய வேண்டும் என்றால் அதற்கு எலக்ட்ரிக் பிரஷ் சிறந்தது.
- உங்களுக்கு பற்களை சுத்தம் செய்வதில் ஆர்வம் இல்லை எனில் அதற்கு எலக்ட்ரிக் பிரஷ் சிறந்தது.
இவை இரண்டில் எது சிறந்தது என்பதை நீங்கள் தான் தேர்வு செய்ய வேண்டும்.