பொடுகு தொல்லையா..? இதோ தீர்வு..!
தலையில் உண்டாகும் பொடுகு, கொப்புளங்கள் சரியாக செம்பருத்தி பூவை அரைத்து தலையில் தடவி 15 நிமிடங்களுக்கு ஊறவைத்து குளிக்கலாம்.
சீயக்காய் அரைக்கும்போது வேப்பிலை, வெள்ளை மிளகு, வசம்பு ஆகியவற்றை சேர்த்து அரைத்து தலைக்கு பயன்படுத்தினால் பொடுகு தொல்லை நீங்கும்.
பொடுகு தொல்லையில் இருந்து விடுபட இரண்டு ஸ்பூன் வினிகருடன் கடலைமாவினை சேர்த்து கலந்து முடியின் வேர்களில் தடவி அரை மணி நேரம் ஊறவைத்து தலையை அலசலாம்.
தலையில் இருக்கும் பேன் தொல்லை நீங்க தேங்காய் எண்ணெயுடன் செம்பருத்தி பூ, கற்பூரப்பொடி சேர்த்து தலையில் தடவி வரலாம்.
தலையில் இருக்கும் பேன் ஒழிய இரவில் படுக்கும்போது தலையணைக்கு அடியில் செம்பருத்தி பூ மற்றும் இலையை வைத்து படுக்கலாம்.
தேங்காய் பாலை எடுத்து அதில் எலுமிச்சை சாறு, தயிர் கலந்து தலையில் தடவி ஊறவைத்து குளித்து வர பொடுகு தொல்லை நீங்கும்.
தேங்காய் எண்ணெயில் சிறிது கற்பூரத்தை சேர்த்து தலையில் தேய்த்து வர பொடுகு தொல்லை நீங்கிவிடும்.
அரைத்த மருதாணி இலையுடன் எலுமிச்சை சாறு, தயிர் கலந்து தலையில் பூசி வந்தால் பொடுகு நீங்கிவிடும்.
