பெண்களே இது உங்களுக்குத்தான்..!
பரோட்டாவிற்கு மாவு பிசையும்போது தண்ணீருக்கு பதிலாக குடிக்கும் சோடா கலந்து பிசைந்து சுட்டால் பரோட்டா மிருதுவாக இருக்கும்.
முள்ளங்கி இலையை எண்ணெயில் வதக்கி பின் மிளகாய், பெருங்காயம், உளுந்தம்பருப்பு சேர்த்து வதக்கி அரைக்க சுவையாக இருக்கும்.
பீட்ரூட் அல்வா செய்யும்போது பீட்ரூட்டை துருவி பின் பாலில் வேகவைத்து அல்வா செய்தால் கூடிதல் ருசியாக இருக்கும்.
கன்னங்கள் ஒட்டி போனால் காலை உணவாக பச்சை பயிறை சாப்பிட கன்னம் பருகும்.
வடை போண்டா பஜ்ஜி செய்யும்போது மாவினை அரைத்து பின் ஃபிரிஜ்ஜில் சிறிது நேரம் வைத்திருந்து பின் சுட்டால் உப்பலாக வரும்.
பாத்திரத்தில் அடிப்பகுதியில் கரிப்போன்ற கறை இருந்தால் அதனை உப்பு கலந்த நீரை கொண்டு கழுவி வந்தால் கறை நீங்கும்.
தீராத மூச்சுதிணறலுக்கு காலை மாலை என இரு நேரமும் காய்ச்சிய பாலில் இரண்டு ஸ்பூன் குப்பைமேனி இலைச்சாற்றை கலந்து குடிக்கலாம்.
கோதுமை மாவில் சிறிது உப்பு சேர்த்து கலந்து வைக்க பூச்சுகள் அண்டாது.
இட்லி வெள்ளையாக இருக்க மாவி அரைக்கும்போது கொஞ்சமாக ஜவ்வரிசியை சேர்த்து அரைத்து இட்லி சுடலாம்.
பழங்களை பாதியாக நறுக்கி வைக்கும்போது கருத்துப்போகாமல் இருக்க அதில் சிறிது உப்பு தடவி வைக்கலாம்.
சர்க்கரையை ஒரு துணியில் கட்டி பிஸ்கட்டு வைக்கும் டப்பாவில் போட்டு வைக்க பிஸ்கட் நமத்து போகாமல் இருக்கும்.
பாதாமின் தோலை சுலபமாக உரிக்க சூடான நீரை பாதாமில் ஊற்றி சிறிது நேரம் வைத்திருந்து பின் உரிக்க தோல் ஈசியாக வரும்.