திருப்பதி லட்டில் சர்ச்சை..!! ராகுல்காந்தி வலியுறுத்தல்..!!
புனித வழிபாட்டு தலங்களில் ஒன்றாக போற்றப்படும் திருப்பதியில் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும் லட்டுவில் மோசடி நடந்திருப்பது வேதனை அளிக்கிறது. அதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும் என ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார்.
திருப்பதி வெங்கடேச பெருமாள் கோவிலில் மத்திய அரசின் தேசிய பால்வள மேம்பாட்டு வாரியத்தின் கால்நடை மற்றும் உணவு ஆய்வு நிறுவனம் குஜராத்தில் செயல்பட்டு வருகிறது. திருப்பதி பெருமாள் கோவிலில் பக்தர்களுக்கு பிராசதமாக வழங்கப்பட்டு வரும் இந்த லட்டுவில் மாட்டு கொழுப்பு மற்றும் மீன் கொழுப்பு கலக்கப்பட்டு இருப்பதாக பல குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது..
அதன் படி மத்திய அரசின் தேசிய பால்வள மேம்பாட்டு வாரியம் திருப்பதி லட்டுவை பரிசோதனைக்காக எடுத்து சென்று நெய்யில் விலங்குகளின் கொழுப்பு இருந்ததா என்பது குறித்து ஆய்வு செய்தது.
ஆய்வின் முடிவில் வெளியான அறிக்கையில், “திருப்பதி லட்டு தயாரிக்கப் பயன்படுத்தப்பட்ட நெய்யில், விலங்குகளின் கொழுப்பு கலந்து இருப்பது ஆய்வின் முடிவில் தெரியவந்துள்ளது.. அதாவது பிரசாதமாக வழங்கபடும் லட்டுவில் மீன் எண்ணெய், மாட்டின் கொழுப்பு மற்றும் பன்றிக் கொழுப்பு ஆகியவை கலக்கப்பட்டிருபது உறுதி செய்யப்பட்டது..
இதற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் லட்டுவில் மீன் எண்ணெய், மாட்டின் கொழுப்பு மற்றும் பன்றிக் கொழுப்பு ஆகியவை கலக்கப்பட்டிருப்பது குற்றத்திற்கு குரிய செயல் இதனால் திருப்பதியின் புனிதம் கெட்டுப்போயி விட்டதாக கண்டனங்கள் தெரிவித்து வந்தனர்.,
தற்போது காங்கிரஸ் மூத்த தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான ராகுல்காந்தி “திருப்பதியில் பிரசாதமாக வழங்கப்பட்டு வரும் லட்டுவை தயாரிப்பதற்காக பயன்படுத்தப்படும் நெய்யில் கொழுப்பு கலக்கப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்ட செய்தியை கண்டு அதிர்ச்சி அடைந்தேன்., இது மிகவும் வேதனை அளிக்கிறது.. திருப்பதி ஏழுமலையானுக்கு என்று உலகெங்கிலும் பக்தர்கள் இருக்கிறார்கள்.., இப்படி இருக்கையில் பிரசாதத்தில் விலங்கு கொழுப்பு கலந்ததாக வரும் தகவல் ஒவ்வொரு பக்தரையும் காயப்படுத்தியுள்ளது..
அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்., மீண்டும் ஒருமுறை உறுதி செய்து அந்த அறிக்கைகளை வெளியிட வேண்டுமென ராகுல் காந்தி அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்..