சர்வதேசத் திரைப்பட விழா…!! அமைச்சர் சுவாமிநாதன் நிதியுதவி..!!
மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் ஆணையின்படி, மாண்புமிகு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் திரு.மு.பெ.சாமிநாதன் அவர்கள் இன்று (09.12.2024) தலைமைச் செயலகத்தில் 12.12.2024 முதல் 19.12.2024 வரை சென்னையில் நடைபெறும் 22-வது சென்னை சர்வதேசத் திரைப்பட விழாவிற்கு தமிழ்நாடு அரசின் சார்பில் ரூபாய் 85 இலட்சத்திற்கான காசோலையினை வழங்கினார்கள்.
தமிழ்நாடு அரசின் சார்பில், ஆண்டுதோறும் சென்னை சர்வதேசத் திரைப்பட விழாவிற்கு ரூபாய் 75 இலட்சம் நிதயுதவி வழங்கப்பட்டு வந்த நிலையில், மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் ஆணையின்படி, 2023 ஆம் ஆண்டு ரூபாய் 85 இலட்சமாக உயர்த்தி வழங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் ஆணையின்படி இந்த ஆண்டும் 12.12.2024 முதல் 19.12.2024 வரை சென்னையில் நடைபெறும் 22-வது சென்னை சர்வதேசத் திரைப்பட விழாவிற்கு தமிழ்நாடு அரசின் சார்பில் ரூபாய் 85 இலட்சத்திற்கான காசோலையினை மாண்புமிகு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் அவர்கள் இன்று (09.12.2024) இந்திய திரைப்படத் திறனாய்வுக் கழகத்தின் பொதுச் செயலாளரும், சென்னை சர்வதேசத் திரைப்பட விழா இயக்குநருமான ஏ.வி.எம் சண்முகம் அவர்களிடம் வழங்கினார்கள்.
இந்நிகழ்வின் போது, தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை செயலாளர் வே.ராஜாராமன், மக்கள் தொடர்புத் துறையின் கூடுதல் இயக்குநர் மு.பா.அன்புச்சோழன், கூடுதல் இயக்குநர் எஸ்.செல்வராஜ் இந்திய திரைப்பட திறனாய்வுக் கழகத்தின் தலைவர் சிவன் கண்ணன் மற்றும் துணைத் தலைவர் ஆனந்த் ரங்கசாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..