நான் ஒருநாள் ராஜாவானால்..!! குட்டி ஸ்டோரி – 34
ஒரு நாள் ராஜா ஒரு அறிவிப்பு விட்டாராம் இந்த நாட்டுக்கு யாருனாலும் ராஜாவே இருக்கலாம் ஆனால் அதுல ஒரு கண்டிஷன் இருக்கு ஐந்து வருஷம் நாட்டை ஆண்ட பிறகு அந்த நதி பக்கத்துல இருக்குற காட்டுல விட்ருவாங்க அவன் திரும்பிவந்த வாழ்வான் என்று அந்த ராஜா சொன்னாராம், முதலில் ஒருவர் அந்த நாட்டில் ராஜாவா இருந்த பிறகு மேளதாளங்கள் எல்லாம் முழங்க ஊர்மக்கள் எல்லாரும் அந்தநதி பக்கத்துல இருக்குற காட்டுல விட்டுட்டாங்க அவன் கொஞ்ச நாட்கள் கழிந்த பிறகு திருப்பி அந்த ஊருக்கு வந்தான் ஆனால் அங்கு அவனை விலங்குகள் எல்லாம் கடித்தது நாள் இரண்டு நாள்களில் இறந்து விட்டான்.
ஒரு விவசாயின் மகன் நான் செல்கிறேன் என்று கூறினான் அதற்கு அந்த ஊர் மக்கள் அனைவரும் அவனிடம் நீயும் அங்கு சென்று வந்த பிறகு இறந்து கிடைக்க போகிறாயா செல்லாதே என்று கூறினார்கள் ஆனால் அவன் இல்ல நான் மீண்டும் உங்கள் முன் வந்து நலமுடன் வாழப்போகிறேன் என்று கூறினான்.
அதுமாதிரி அந்த நட்டோட ராஜாவா மாறினான் அவனோட ஐந்து ஆண்டு காலமும் முடிந்தது எல்லாரும் சேர்ந்து அந்த காட்டில் விட்டுட்டாங்க . நாட்களும் கடந்தது ஒரு நாள் அவன் திரும்பி ஊருக்கு வந்தான் ஊரில் இருக்கிற எல்லாரும் அவனிடம் கேட்டனர் நீ மட்டும் எப்படி இங்கு நல்ல படியாக வந்தாய் என்று கேட்டனர்,
அதற்கு அவன் கூறினான் நான் ஐந்து ஆண்டு ஆட்சி செய்யும் போது முதல் வருஷம் அங்கு இருக்கிற விலங்குகளை எல்லாம் வீரர்கள் அனைவரும் அழிக்க சொன்னேன், அதற்கு அப்புறம் அங்கு இருக்கிற மரங்களை எல்லாம் அகற்றிவிட்டு அரண்மனை காட்டினேன் ஐந்து ஆண்டுப்பிறகு அங்கு சென்று நான் ராஜாவாக வாழ்ந்து விட்டு திரும்பி வந்தேன். நான் பிற்காலத்தில் வாழ்வதற்காக முன்கூட்டியே நான் திட்டம் போட்டதினால் தான் திரும்பி வந்தேன் என்று கூறினான்.
-சரஸ்வதி
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..