உதயநிதியிடம் ஒன்ஸ்மோர் கேட்ட மக்கள்..!! மாஸ் காட்டும் வடசென்னை..!!
நடைபெற இருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் யார் வெற்றி பெறுவார்கள் என்ற கேள்வி நாளுக்கு நாள் மக்கள் மனதில் அதிகரித்து கொண்டே வந்தாலும் அதே சமையம் கட்சி வேட்பளார்களும் அதற்கு ஏற்றார் போல தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர்.
அந்த வகையில் திமுக விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.., வடசென்னை நாடாளுமன்ற வேட்பாளர் கலாநிதி வீராசாமி அவர்களை ஆதரித்து கொருக்குப்பேட்டையில் இரவு 7 மணியளவில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். முன்னதாக அவருக்கு அப்பகுதி மக்கள் மலர் தூவி வரவேற்றனர்.
அப்போது பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.., இதற்கு முன் மத்திய அரசு கொண்டு வந்த திட்டங்கள் குறித்து பேச ஆராமித்தார். அதாவது மகளிர் உதவி திட்டம், மகளிர்கான விடியல் பயணம் மற்றும் மாணவர்களுக்கான நான் முதல்வன் திட்டம் உட்பட பல்வேறு திட்டங்கள் குறித்தும்.., இனிமேல் வர இருக்கும் திட்டங்கள் குறித்தும் பேச தொடங்கினார்.
அப்போது பேசிய அவர் எடப்பாடி பழனிசாமி குறித்து விமர்சனம் செய்ய தொடங்கினார் அதாவது.., “நான் கல்லை தான் காட்டுனன் ஆனா நம்ப பாதம் தாங்கி எடப்பாடி பழனிசாமி” பல்லை காட்டுராரு. என சொன்னார்.
மேலும் அதனை தொடர்ந்து பேசிய அவர் நான் பிரச்சாரம் செய்யும் இடங்களில் எல்லாம்.. உதயநிதி என் போட்டோவை வைத்து பேசுகிறார்.., உதயநிதியும் தான் மோடியிடம் சென்று பல்லை காட்டினார் என சொல்லுகிறார்.
ஆம் நான் மோடியை சந்தித்தது உண்மை தான் ஆனால் நான் சென்றது நீட் தேர்வு ரத்து செய்வதற்காக.., மோடியிடம் கோரிக்கை மனு அளித்தேன்.., அந்த நாள் குறித்த செய்தி எல்லாம் சேனல்க்கள் மற்றும் பத்திரிகைகளில் வெளியானது.., நான் ஒவ்வொரு இடத்திலும் ஒரே மாதிரியாக பேசுகிறேன்.., ஒரே கொள்கையை பற்றி பேசுகிறேன்.
ஆனால் எடப்பாடி நீங்கள் எத்தனை முறை மோடியையும், சசிகலாவையும் சந்தித்து காலில் விழுந்திங்க என்பது மக்களுக்கு தெரியும். இதுவரை நீங்கள் இந்த தொகுதி மக்களுக்காக செய்தது என்ன..? எனவும் கேள்வி எழுப்பினார்.
இதனை தொடர்ந்து அவர் பேசி கொண்டிருந்த போது அங்கிருந்த மக்கள் உதயநிதியிடம் ஒன்ஸ் மோர் கேட்டனர்.., என்ன சொல்ல வேண்டும் என அவர் கேட்டதற்கு, “பாதம் தாங்கி பச்சோந்தி பழனிசாமி ” என சொல்லுங்க என கூச்சலிட்டனர். மக்களின் ஆசைக்கு இணங்கிய உதயநிதி “பாதம் தாங்கி பழனி சாமி” என சொன்னார். மீண்டும் மக்கள் ஒன்ஸ் மோர் கேட்டதால்.
உதயநிதி ஸ்டாலின்.., அம்மா நான் அவரை தொடர்ந்து இந்த வார்த்தையை சொன்னால் நாம் என்னவோ அவரை விமர்சனம் செய்கிறோம் என சொல்லி விடுவார்.. என கூறினார்.
அதனை தொடர்ந்து பேசிய அவர், வருகின்ற தேர்தலில் உங்களின் சிறந்த நாடாளுமன்ற தலைவர் யார் என்பதை பார்த்து வாக்களியுங்கள். இந்த தொகுதிக்காக உங்கள் தொகுதி எம்.எல்.ஏ உங்களின் கோரிக்கைகளை என்னிடம் சொல்லி உடனுக்குடன் நிறைவேற்றியுள்ளார். நான் உங்கள் மகனாக கேட்கிறேன் என்னை நம்பி மீண்டும் வாக்களிப்பீர்களா..? என கேட்டார்.
எங்கள் ஒட்டு உங்களுக்கு தான் என கத்தி கூச்சலிட்ட மக்கள்.., வீர வால் ஒன்றை உதயநிதிக்கு பரிசாக அளித்துள்ளனர்.., அதனை பெற்ற அவர் மக்களின் உயர்த்தி காட்டி நாம் வெற்றி பெறுவோம் என கூறினார்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..