“என் சகோதரிகளை லட்சாதிபதி ஆக்குவேன்..” பிரதமர் மோடி 100..!! வெளியான சாதனை பட்டியல்..!!
செப்டம்பர் 17ம் தேதியான இன்று வரலாற்று மிக்க சிறப்பு நாளாக அமைந்துள்ளது., பெண் விடுதலைக்காகவும் சமூக நீதிக்காகவும் பாடுபட்ட தந்தை பெரியாரின் 146வது பிறந்தநாள்., திமுக கட்சி தொடங்கப்பட்ட நாளாகவும்., அந்த வகையில் திமுக சார்பில் பவளவிழா இன்று மாலை சென்னை நந்தனம் YMCA மைதானத்தில் நடைபெறவுள்ளது.. அதேபோல் பிரதமர் மோடி இன்று தன்னுடைய 74வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்..
அதுமட்டுமின்றி பிரதமர் மோடி ஆட்சி அமைத்து அதாவது தொடர்ந்து . 3-வது முறையாக பிரதமர் நரேந்திரமோடி ஆட்சி அமைத்துள்ளார்.. இந்த லோக்சபா தேர்தலுக்கு பின் இன்றும் பிரதமர் ஆட்சி அமைத்து 100 நாள் ஆகிறது.. எனவே குஜராத் மாநிலத்தில் பிரதமர் மோடியின் சாதனை பட்டியலை விளக்கும் விதமாக கடந்த 2001ம் ஆண்டு முதல் 2014 வரை, தொடர்ந்து 3 முறை முதல்-மந்திரியாக இருந்த மோடி, 2014ம் ஆண்டு இந்திய பிரதமராக பதவி வகித்தார்..
இன்றுடன் 3 ஆண்டுகள் கடந்து மீண்டும் ஆட்சி தொடங்கி 100 வது நாள் தொடர்ந்துள்ள நிலையில் பிரதமர் நரேந்திரமோடியின் 100 நாள் ஆட்சியின் சாதனைகள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இந்த 100 நாட்களில் அவர் ரூ.15 லட்சம் கோடி மதிப்பிலான திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணித்துள்ளார். அதில், ரூ.3 லட்சம் கோடி மதிப்பிலான மதிப்பிலான திட்டங்கள் சாலை, இரயில்வே, துறைமுகம், விமான சேவை போன்ற பல கட்டமைப்பு திட்டங்கள் என்பது குறிப்பிடத்தக்கது..
பிரதமர் மோடி தற்போது தொடங்கவுள்ள திட்டமானது பெண்களுக்கான லட்சாதிபதி சகோதரிகள் திட்டம முத்திரை பதிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டமானது மகளிர் சுயஉதவி குழுக்கள் மூலம் பெண்கள் ஆண்டுக்கு 1 லட்சத்துக்கு மேல் சம்பாதிக்க வைப்பதற்கான திட்டம் கொண்டுவரவுள்ளது., இந்த திட்டத்தின் மூலம் ஒரு கோடிக்கும் மேற்பட்ட பெண்கள் பயன் அடைவார்கள் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. “இந்த எண்ணிக்கையை 3 கோடியாக உயர்த்துவதே லட்சியம்” என்று முழங்கிய பிரதமரின் இந்த 100 நாள் ஆட்சியில், புதிதாக 11 லட்சம் பெண்கள் இந்த பட்டியலில் சேர்கப்படுள்ளார்கள்..
அடுகடுக்கான சாதனை பட்டியல்கள் :
சுயதொழில் செய்யும் பெண்களுக்கு மட்டுமின்றி 70 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இலவச மருத்துவ காப்பீடு திட்டம் வழங்கப்படவுள்ளது.. பிரதமர் மோடியின் கனவு இல்லம் திட்டமான வீடு கட்டும் திட்டத்தின் கீழ் 3 கோடி வீடுகள் கட்டுவதற்கான ஒப்புதல்கள் வழங்கப்பட்டுள்ளது.
விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதார விலையை உயர்த்தியுள்ளது.. இதன் மூலம் 12 கோடியே 33 லட்சம் விவசாயிகள் பயனடைந்துள்ளனர்.
இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பை உருவாக்கும் வகையில் 2 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.. வேலை வாய்பற்ற இளைஞர்களுக்கு சுய தொழில் தொடங்கும் வகையில் வழி வகை செய்யப்பட்டுள்ளது..
அரசு ஊழியர்களுக்கான ஒருங்கிணைந்த பென்ஷன் திட்டம், சிறு தொழில்களுக்கான முத்ரா கடன் வரம்பை 10 லட்சத்தில் இருந்து 20 லட்சமாக உயர்த்தியுள்ளது.
மத்திய அரசாங்கத்தில் 15 ஆயிரம் பேருக்கு புதிய வேலைவாய்ப்பு என்று பல சாதனைகள் அடுக்கடுக்காக பட்டியலிடப்பட்டுள்ளது.
நேற்று கூட தூத்துக்குடியில் சர்வதேச சரக்குப் பெட்டக முனையத்தை பிரதமர் நரேந்திரமோடி திறந்து வைத்துள்ளார்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..