“நான் கதை கேட்டு நடிப்பவன் அல்ல”, “இயக்குனரின் கஷ்டங்களை கேட்டு நடிப்பவன்”.. மனம் திறக்கும் யோகி பாபு..!!
பிரபல நகைச்சுவை நடிகரான “யோகி பாபு” ரஜினி, விஜய், அஜித், போன்ற பிரபல நடிகர் களுடனும் சிவகார்த்திகேயன், அருண் விஜய், பிரதீப் ரங்கநாதன் போன்ற முன்னணி நடிகர்களுடனும் நடித்தவர்.
காமெடியனாக மட்டுமின்றி கோலமாவு கோகிலா, பொம்மை நாயகி, எமதர்மன், கூர்க்கா போன்ற பல படங்களில் கதாநாயகனாகவும் நடித்துள்ளார். தற்போது பாலாஜி வேணுகோபால் இயக்கியுள்ள லக்கி மேன் என்ற திரைப்படத்தில் ஹீரோவாக நடித்து இருக்கிறார்.
லக்கிமேன் படத்தின் ஆடியோ லாஞ்சில் பேசிய நடிகர் யோகி பாபு, படத்தின் பெயர் லக்கியாக இருந்தாலும் வாழ்க்கையில் நான் அன் லக்கியாக தான் இருக்கிறேன்.., . மடோன் அஸ்வின், பாலாஜி, போன்ற இயக்குனர்களால் இப்போது லக்கி மேன் ஆகிவிட்டேன்.
நான் சினிமாவிற்கு வந்து 23 ஆண்டுகள் ஆகிவிட்டது, பொதுவாக என்னிடம் கதை சொல்ல வரும் இயக்குனரிடம் கதை கேட்டு நான் நடிப்பதில்லை, அவர்களின் கஷ்டங்களை கேட்டு மட்டுமே நான் நடிப்பதற்கு சம்மதிப்பேன். சில இயக்குனர்கள் எனக்கு சிறந்த படம் கொடுத்து இருக்கிறார்கள்.
ஒரு காமெடியனாக என் நடிப்பு பயணம் தொங்கியது.., ஒரு கதைக்கும் நான் ஹீரோவாக தகுதி பெற்று இருந்தால் அதில் நான் கட்டாயம் ஹீரோவாக நடிப்பேன், ஏனென்றால் என்னை விட மிக திறமை வாய்ந்த ஹீரோக்கள் இருக்கிறார்கள், இல்லை காமெடியனாக நடிக்க வேண்டும் என்றால் காமெடியனாகவும் நடிப்பேன். காமெடியன் என்பதை நான் என்றும் விட்டு கொடுக்க மாட்டேன்,. என செய்தியாளர்கள் முன் அவர் பேசினார்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..