வொயிட் மூன் இனி ப்ளூ மூன்..? அதை பார்க்க நீங்க ரெடியா..?
சூப்பர் ப்ளூ மூன் எனப்படும் அரிய நிகழ்வு இன்று (30.08.2023) இரவு 8:37 மணிக்கு விண்ணில் நிகழப் போகிறது, என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இந்த ப்ளூ மூனை நாம் வெறும் கண்களால் பார்க்க முடியும் எனவும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
வழக்கமாக தோன்றும் பௌர்ணமி நிலவை விட நாளைய தினம் தோன்றும் நிலா கூடுதல் வெளிச்சத்துடன் தென்படும்.
இந்த நிலவிற்கு ப்ளூ மூன் என பெயர் வைத்ததற்கான காரணம் தெரியுமா..?
மாதத்தில் ஒரு முறை மட்டுமே பௌர்ணமி வரும்.., எதாவது ஒரு மாதம் மட்டும் தான் மாதத்தில் இரண்டு முறை பௌர்ணமி தென்படும். அப்படி இரண்டாவதாக வருகின்ற பௌர்ணமிக்கு “ப்ளூ மூன்” என பெயர்.
150 ஆண்டிற்கு ஒரு முறை மட்டுமே இந்த “ப்ளூ மூன்” தோன்றும். ஆனால் இதற்கு முன் 1947ம் ஆண்டு தோன்றியுள்ளது அதன் பின் இன்று தான் இந்த ப்ளூ மூன் தோன்ற உள்ளது.
Discussion about this post