எனக்கு ஒரு துளி பயம் கூட இல்ல..!! இது சசிகலாவின் கெத்தா இல்ல..?
ஓபிஎஸ் எங்க கட்சிக்காரர் அவர் எப்போதும் வேண்டுமானாலும் எங்களை வந்து சந்திப்பார்.., எதை எப்ப செய்யனும்னு எனக்கு தெரியும்.., அதிமுகவை ஒட்ட வைக்க வேண்டியது என் பொறுப்பு.. நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக யாருடன் கூட்டணி என்பதை நானே முடிவெடுப்பேன் அதை விரைவில் வெளியிடுவேன்..
அதிமுகவில் இருந்து ஓ.பன்னீர் செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் வெளிநடப்பு செய்யப்பட்ட நிலையில் பாஜக கூட்டணியில் இருந்து எடப்பாடி பழனிசாமி விலகி விட்டார்..
இந்த சமயத்தில் சசிகலா, டி.டி.வி தினகரன் என்ன செய்ய போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பே அதிகாமாக உள்ளது.., மீண்டும் பாஜக அதிமுக கூட்டணி இணையும் என்ற கேள்விகள் அதிகமாக எழுப்பப் பட்டுள்ளது..
அதிமுகாவை ஒன்று சேர்த்து வைப்பதே என்னுடைய இலக்கு என சசிகலா சொன்ன நிலையில் ஒரு செய்தியாளர் கேட்ட கேள்விக்கு கோபமாக பதில் அளித்துள்ளார்..
செய்தியாளர் கேள்வி :
அப்போ நீங்க அதிமுக-வை சேர்த்து வைக்க மட்டும் தான் வந்திங்களா தேர்தலில் நிக்க நீங்க வரலையா என கேட்டதற்கு..
அதை போய் நான் எப்படி உங்க டிவியில் சொல்ல முடியும்.., இப்போ தான் நான் வந்து இருக்கன் இனி போக போக என் ஆட்டத்தை பாருங்க.. எனக்கு கொஞ்சம் கூட பயம் இல்ல நாங்க தனியா நின்னாலே ஜெயிச்சுடுவோம்.., அதிமுக ஒவ்வொரு தொண்டர்களின் அடையாளம்..
இது மக்களால் மக்களுக்காக உருவான கட்சி அதை கலைக்க நான் விரும்பல நீங்க ஜெயலலிதா அம்மா இருக்கும் பொழுது எப்படி பார்த்திங்களோ அதே மாதிரி ஒற்றுமையான.., ஆட்சிய பாக்க போறீங்க யார் தப்பு பண்ணாலும் தண்டிக்க படுவாங்க..
எந்த கட்சியிலுமே ஒரு தலைவர் போனா.., அந்த இடத்துக்கு இன்னொருத்தங்க வர தான் செய்வாங்க அதை தான் நாங்களும் பண்ண போறோம்.., என் அனுபவ ஆட்சியை பொறுத்து இருந்து பாருங்க..,
வருகிற நாடாளுமன்ற தேர்தலில் யார் வெற்றியாளர் என்பதை மக்கள் முடிவு செய்வார்கள்.., அந்த வெற்றி இடத்தில் நாங்கள் யாருடன் இருந்தால் வெற்றி என்பதை நான் விரைவில் வெளியிடுவேன் என சசிகலா பேட்டி அளித்துள்ளார்..
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..