2040க்கு அப்புறம் உங்க கால் தரையில படாது.. பிரதமர் மோடியின் புது உருட்டு..!!
2040-க்குள் நிலவுக்கு இந்தியாவின் சார்பில் மனிதனை அனுப்ப வேண்டும் என விஞ்ஞானிகளுக்கு பிரதமர் மோடி அறிவுறுத்தியுள்ளார்.
ககன்யான் திட்டத்தின் முன்னேற்றம், விண்வெளி ஆய்வு முயற்சிகளின் எதிர்காலம் குறித்து பிரதமர் மோடி தலைமையில் உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
எச்.எல்.வி.எம் 3ன் (HLVM3) மூன்று குழுவில்லாத பயணிகள் உட்பட, 20 முக்கிய சோதனைகளுக்கான திட்டங்கள் குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டன.
இந்நிலையில், 2040க்குள் நிலவுக்கு இந்தியாவின் சார்பில் மனிதனை அனுப்ப வேண்டும் என்று விஞ்ஞானிகளுக்கு பிரதமர் மோடி அறிவுறுத்தினார். இதுகுறித்து பேசிய பிரதமர் மோடி, 2035-க்குள் இந்திய விண்வெளி ஆய்வு மையத்தை உருவாக்க வேண்டும் என அறிவுறுத்தினார்.
வெள்ளி கிரகத்தின் ஆர்பிட்டர் மிஷன், செவ்வாய் லேண்டர் உள்ளிட்ட கோள்களுக்கு இடையேயான பயணங்களில் பணியாற்ற வேண்டும் என்றும், விண்வெளி ஆய்வில் இந்தியா புதிய உயரங்களை அடைய வேண்டும் என கூறினார்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..