வாயை திறக்காத மோடி.. சரமாரியாக கேள்வி எழுப்பும் ராகுல் காந்தி..
அதானி குழும முறைகேட்டில் பிரதமர் மோடி வாய் திறக்காதது ஏன்..? பிரதமரால் தொடர்ந்து பாதுகாக்கப்பட்டு வருகிறார் அதானி என ராகுல் காந்தி குற்றசாட்டு வைத்துள்ளார். இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில் ..,
காங்கிரஸ் கட்சியின் மத்திய தேர்தல் குழு கூட்டம் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் நடைபெற்றது.. ராஜஸ்தான், சத்தீஸ்கர், மத்திய பிரதேச சட்டப்பேரவை தேர்தலுக்கான எஞ்சிய காங்கிரஸ் வேட்பாளர்கள் பட்டியலும் இறுதி செய்யப்பட்டது.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ராகுல் காந்தி, அதானி நிறுவனத்தின் நிலக்கரி இறக்குமதி முறை கேட்டால் மக்கள் கூடுதலாக பின் கட்டணம் செலுத்த வேண்டிய நிலை உள்ளது. மக்களின் அத்தனை வருமானங்களும் அதானியின் பாக்கெட்டுகளுக்கு நேரடியாக செல்வதாக குற்றம் சாட்டினார்.
பிரதமர் மோடி, அதானி குழுமத்தை பாதுகாப்பதன் காரணமாகவே இந்த முறைகேடு நடந்துள்ளதாகவும், நிலக்கரி இறக்குமதி மூலம் அதானி குழுமம் 12 ஆயிரம் கோடி முறைகேடு செய்துள்ளது. அதானி குழும முறைகேடு தொடர்பாக பிரதமர் மோடி வாய் திறக்காதது ஏன்..?
அதானி குழும முறைகேடு தொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாதது ஏன்..? எனவும் ராகுல் காந்தி கேள்வி எழுப்பினார்..
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..