அடுத்த வெற்றிக்கு நான் ரெடி..! ஸ்டேடஸ் வைக்க நீங்க ரெடியா..? அசத்தும் ஆதித்யா எல்-1..!!
சூரியனை ஆய்வு செய்ய விண்ணில் செலுத்தப்பட்ட ஆதித்யா எல்-1 விண்கலம் இன்று அதிகாலை சூரியன்-பூமி எல்-1 பாயிண்ட்டுக்கு செல்லும் பாதையில் செலுத்தப்பட்டுள்ளது.
வெற்றிகரமாக 4 முறை புவி சுற்றுப்பாதை உயர்த்தப்பட்டு இன்று முதல் சூரியனை நோக்கி தனது முதல் வெற்றி அடியை எடுத்து வைத்துள்ளது..,
110 நாட்கள் தொடர்ந்து பயணிக்க இருக்கும் நிலையில், பூமிக்கும் சூரியனுக்கும் இடையே உள்ள சுற்று வட்ட பாதையில் முதல் சுற்று பாதைக்கு சென்று இருப்பதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.
பூமியில் இருந்து 15 லட்சம் கிலோ மீட்டர் தொலைவில் உள்ள “லாக்ரேஞ் பாயிண்ட் எல்1” என்ற இடத்தில் ஆதித்யா எல்-1 நிலை நிறுத்தப்படும்.., அந்த இடத்தில் இருந்தே தனது ஆய்வை தொடங்கும் என இஸ்ரோ அறிவித்துள்ளது..
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..