“கூட்டணியாவது, கூந்தலாவது, என அதிமுக பேனர் வைத்திருப்பது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதிமுக கூட்டணியில் பாஜக இல்லை என்ற அறிவிப்பை வரவேற்று தூத்துக்குடியில் அக்கட்சியினர் ஒட்டியுள்ள போஸ்டர்கள் பாஜகவினரை அதிர்ச்சியடைய செய்துள்ளது. பேரறிஞர் அண்ணா பற்றிய அண்ணாமலையின் சர்ச்சை கருத்தால் அதிமுக – பாஜக இடையே நிலவி வந்த கருத்து மோதல் முடிவுக்கு வந்துள்ளது. அதிமுக கூட்டணியில் பாஜக இல்லை என அக்கட்சியின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் நேற்று அறிவித்தார்.
இதனை வரவேற்று தூத்துக்குடியில் அதிமுகவினர் ஒட்டியுள்ள சுவரொட்டிகள் பாஜகவினரை கோபத்திற்கு ஆளாகியுள்ளது. தூத்துக்குடி மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி சார்பில் ஒட்டப்பட்ட அந்த சுவரொட்டியில், “விநாயகர் சதுர்த்தி நாளில் பிள்ளையார் சுழி போட்டாச்சு” என்ற வாசகங்கள் இடம் பெற்றுள்ளன. “கூட்டணியாவது, கூந்தலாவது, நன்றி மீண்டும் வராதீர்கள்” என்று பாஜகவை கடுமையாக விமர்சித்து போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.
Discussion about this post