”எனக்கு இப்போ கல்யாணம் வயசு தான் வந்திடுச்சி”… யோகிபாபு 39..!
யோகி பாபு:
தமிழ் சினிமாவின் முன்னனி காமெடி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் யோகி பாபு. தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிரபல நகைச்சுவை தொடரான “லொள்ளு சாப” தொடரில் சிறு வேடங்களில் நடித்து தனது திரைப்பயணத்தை தொடங்கிய இவர்,
தமிழ் சினிமாவில் பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்து பல தடைகளை கடந்து ஒரு நகைச்சுவளராக பிரபலமாகினார்.
மிகவும் பிஸியான நடிகராகவும் மாறியுள்ள இவர் ஒரு படத்தின் ஹீரோவுடைய கால்ஷீட்டை கூட எளிதாக பெற்று விடலாம். ஆனால் யோகிபாபுவின் கால்ஷீட் கிடைப்பது ரொம்ப கஷ்டம் என்று திரைத்துறையினர் கூறும் அளவுக்கு படு பிஸியாக இருக்கிறார்.
ரஜினி, விஜய், சிவகார்த்திகேயன் என முன்னணி நடிகர்கள் நடிக்கும் பெரும்பாலான படங்களில் யோகி பாபு இடம்பெறுகிறார். வடிவேலுவுக்கு அடுத்தபடியாக, வசனங்கள் பேசும் முன்பாகவே பாடி லேங்குவேஜால் ரசிகர்களை சிரிக்க வைக்கும் பெருமைக்குரியவர் நடிகர் யோகி பாபு.
திருமண வாழ்க்கை:
இவர் கடந்த 2020 ஆம் ஆண்டு மஞ்சு பார்கவியை என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியினருக்கு ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் குழந்தை உள்ளது.
நடித்த திரைப்படங்கள்:
பையா திரைப்படத்தில் மும்பை ரௌடிகளில் ஒருவராகவும், இயக்குனர் சுந்தர் சி யின் கலகலப்பு திரைப்படத்தில் பிம்ப் ஏன்னும் கதாபாத்திரத்திலும், வேலாயுதம் திரைப்படத்தில் ஒரு கிராமத்து வாசியாகவும், பின் அட்டகத்தி, சூது கவ்வும், பட்டத்து யானை என பல தமிழ் படங்களில் பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்து வந்துள்ளார்.
2014 ஆம் ஆண்டு வெளியான மான் கராத்தே திரைப்படத்தில் இவர் ஏற்று நடித்துள்ள “வௌவால்”என்ற கதாபாத்திரத்தின் மூலமே தமிழ் சினிமா ரசிகர்களின் கவனத்தை பெற்றார்.
இப்படத்தினை தொடர்ந்து இவர் நடித்த அரண்மனை, ஜெய் ஹிந்த் 2 போன்ற திரைப்படங்கள் இவருக்கு நல்ல வரவேற்பினை பெற்றுத்தந்துள்ளது. குறிப்பாக இவர் 2014-ஆம் ஆண்டு வெளியான “யாமிருக்க பயமேன்” என்ற நகைச்சுவை திகில் திரைப்படத்தில் இவரது “பண்ணி முஜி வாயன்” கதாபாத்திரத்தில் சிறந்த கமெடி நடிகராக மக்கள் மனதில் இடம்பிடித்தார்.
உருவகேளி:
தமிழ் சினிமாவில் தனது உருவத்தால் பலரும் அவரை உருவ கேளிசெய்தனர். ஆனால் இதை எல்லாம் கண்டு கொண்டால் முன்னேர முடியாது என்ற யோகி பாபு, தனது விடா முயற்ச்சி மற்றும் கடின உழைப்பின் மூலம் தற்போது கோலிவுட்டின் தவிர்க்க முடியாத காமெடி நடிகராக உருவெடுத்து இருக்கிறார்.
நடிகராக யோகிபாபு:
தமிழ் சினிமாவில் ஒரு நகைச்சுவை நடிகராக தொடர்ந்து நடித்து வந்துள்ள இவர், தன்னால் ஹீரோவாகவும நடிக்க முடியும் என நடித்த திரைப்படங்கள் தான் தர்ம பிரபு, காக்டெய்ல், பண்ணி குட்டி, கூர்க்கா ரசிகர்களிடம் பாசிடிவ் விமார்சனங்களையும் பெற்றது.
தமிழ் மட்டுமின்றி ஹிந்தி, மலையாளம் உள்ளிட்ட மொழிகளிலும் தற்போது பட்டையை கிலப்பி வரும் யோகிபாபு இன்று தனது 39 வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார்.
அவருக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்துகளை கூறி வரும் நிலையில் அவருக்கு நமது மதிமுகம் குடும்பத்தினர் சார்பாக இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.
-பவானி கார்த்திக்