கத்தோலிக்க மதத் தலைவராக போப் ஆண்டவர் கருதப்படுகிறார். உலகத்தில் வசிக்கும் 130 கோடி கத்தோலிக்க மக்களுக்கும் அவர்தான் தலைவர். கத்தோலிக்க மதத் தலைவர் என்ற வகையில், உலகம் முழுக்க அவருக்கு சொத்துக்கள் உண்டு. பில்லியன் கணக்கான டாலர்களை கையாளுவார். அந்த வகையில், போப் ஆண்டவருக்கு மாதம் 32 ஆயிரம் டாலர் அதாவது, இந்திய மதிப்பில் 27 லட்சம் ஊதியம் வழங்கப்படும். இது தவிர, பல்வேறு சலுகைகளும் உண்டு. ஆனால், போப் பிரான்சிஸ் எளிமையான வாழ்க்கை முறையை வாழ்ந்தவர்.
இதனால், சம்பளப் பணத்தை வாங்கி அப்படியே அறக்கட்டளை நடத்துபவர்களிடத்தில் கொடுத்து விடுவார். போப் ஆண்டவர் ஆவதற்கு முன்னரும், அவர் கத்தோலிக்க சபையில் பணி புரிந்ததற்காக எந்த ஊதியத்தையும் அவர் பெற்றுக் கொண்டதில்லை. கடந்த 2017ம் ஆண்டு அவருக்கு லம்போகினி ஹரிகான் ரக கார் நன்கொடையாக வழங்கப்பட்டது. அந்த காரையும் ஏலம் விட்டு, அறக்கட்டளைகளுக்கு வழங்கி விட்டார்.
.போப் என்ற வகையில் 5 கார்கள் உள்ளிட்ட அவருக்கு 13 கோடி மதிப்புக்கு சொத்துக்கள் உள்ளன. அவரது பெயரில் தனியாக எந்த சொத்தும் இல்லை.
பியூனஸ் அயர்ஸ் நகரை சேர்ந்த போப் பிரான்சிஸ் வேதியியல் படித்தவர். 1969ம் ஆண்டு ஆர்ச் பிஷப் ஆனார். தொடர்ந்து, 2013ம் ஆண்டு மார்ச் 13ம் தேதி 266வது போப் ஆண்டவராக தேர்வு செய்யப்பட்டார். அத்துடன் அவரின் பெயரும் பிரான்சிஸ் என்று மாற்றப்பட்டது.