அமெரிக்காவின் லாஸ் ஏஞ்செல்ஸ் நகரில் உள்ள டால்பி திரையரங்கில், திரையுலகின் மிக உயிரிய விருதான ஆஸ்கர் விருது வழங்கும் விழா கோலாகலமாக நடந்து முடிந்துள்ளது.
95வது ஆஸ்கர் விருது விழா நடந்து முடிந்துள்ள இந்தருணத்தில் ஆஸ்கர் விருது பெறுபவர்களுக்கு வழங்கப்படும் சிலையின் சிறப்பம்சங்கள் குறித்த சில சுவாரஸ்ய தகவல்களை அறிந்து கொள்வோம்…
ஆஸ்கார் விருது என்ன பொருளால் ஆனது?
நாசா தனது சாதனங்களுக்கு பயன்படுத்தக்கூடிய அதே பொருளை பயன்படுத்தி தான் ஆஸ்கர் விருது சிலை தயாரிக்கப்படுகிறது என்பது உங்களுக்கு தெரியுமா?… இது சிலருக்கு ஆச்சரியமாக இருக்கலாம்.
எப்னர் டெக்னாலஜி என்ற நிறுவனம் சிலைகளை உருவாக்கும் பொறுப்பில் உள்ளது, இது பிரிட்டானியம், தாமிரம், டின் மற்றும் ஆண்டிமனி ஆகியவற்றின் கலவையைப் பயன்படுத்தி சிலையை உருவாக்குகிறது. அதன் மீது 24-காரட் தங்கத்தால் முலாம் பூசப்படுகிறது.
இந்நிறுவனம் விருது சிலை மீது பூசப்படும் தங்க முலாமிற்கு வாழ்நாள் உத்தரவாதத்தையும் அளிக்கிறது. அந்த அளவிற்கு சிலை மீதுள்ள பூச்சு என்ன ஆனாலும், போகவே, போகாது என உறுதியாக தெரிவித்துள்ளது.
bronze and gold statuettes
ஆஸ்கர் விருது சிலையின் உண்மையான மதிப்பு வெறும் ஒரு டாலர்கள் மட்டுமே ஆகும். ஆனால் பல பிரபலங்களின் ஆஸ்கர் விருதுகள் ஏலத்தில் பல மில்லியன் டாலர்கள் வரை சென்றுள்ளது.
அகாடமி ஆஃப் மோஷன் பிக்சர்ஸ் ஆர்ட்ஸ் அண்ட் சயின்ஸ் வழங்கும் இந்த விருதை விற்பது 1950ம் ஆண்டு முதல் தடை செய்யப்பட்டுள்ளது. இதனை ஏலம் மூலம் விற்க விரும்பினால் ஆஸ்கர் அகாடமிக்கு ஒரு டாலரை திருப்பி செலுத்திய பிறகே விற்க வேண்டும் எனக்கூறப்படுகிறது.
1940களில் ‘காசாபிளாங்கா’ படத்தை இயக்கிய மைக்கேல் கர்டிஸ் வென்ற ஆஸ்கார் விருது 2003ம் ஆண்டு ஏலம் விடப்பட்டது. அதனை மேஜிக் நிபுணரான டேவிட் காப்பர்ஃபீல்ட் என்பவர் $232,000 அமெரிக்க டாலர்கள் செலுத்தி வாங்கினார். 10 ஆண்டுகளுக்குப் பிறகு, அவர் அதை 2 மில்லியன் டாலர்களுக்கு ஏலம் எடுத்தார்.
புகழ்பெற்ற இயக்குனர் ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் 2001 ஏலத்தில் $578,000 செலவழித்து 1938 ஆம் ஆண்டு நாடகமான Jezebel இல் சிறந்த நடிகைக்கான பெட் டேவிஸின் ஆஸ்கார் விருதை வாங்கினார். அடுத்த ஆண்டு 1935 ஆம் ஆண்டின் டேஞ்சரஸ் படத்திற்காக நடிகை வாங்கிய மற்றொரு சிலையை அவர் வாங்கினார். அதே போல் கிளார்க் கேபிளின் அகாடமி விருதை இட் ஹேப்பன் ஒன் நைட்டுக்காக வாங்கினார். ஆனால் திரைப்பட வரலாற்றை பாதுகாக்கும் நோக்கத்துடன் ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் தான் ஏலத்தில் எடுத்த அனைத்து ஆஸ்கர் விருதுகளையும் அகடாமிக்கே திரும்ப வழங்கினார்.
மேலும் WalletHub மற்றும் Money.com ஆகிய இணையதளங்களின் கணக்கீடுகளின் அடிப்படையில், ஆஸ்கர் விருது சிலையின் ஸ்கிராப் மதிப்பு $400 முதல் $650 வரை இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.