ஜவான் படம் எப்படி இருக்கு..? மதிமுகம் ரிவியூ..!!
ராஜா ராணி, தெறி, மெர்சல், பிகில் என தமிழில் வசூல் ரீதியாக தொடர் வெற்றிப் படங்களைக் கொடுத்தவர் இயக்குனர் “அட்லி“, தமிழ் நடிகர்களை வைத்து ஹிட் கொடுத்த அவர் முதல் முறையாக ஷாருக்கானை வைத்து தமிழில் ஜவான் படத்தை இயக்கினார்.
ஜவான் படத்தில் ஷாருக்கானுடன் நயன்தாரா, விஜய் சேதுபதி இருவரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும் யோகிபாபுவின் அசத்தல் காமெடியுடன், தீபிகா படுகோன், சஞ்சய் தத் கவுரவ தோற்றத்திலும் நடித்துள்ளனர், அனிருத் இசையில் “ஜவான்” படம் இன்று வெளியாகியுள்ளது.
தமிழ், தெலுங்கு ஹிந்தி என அனைத்து மொழிகளிலும் வெளியாகியுள்ள இந்த திரைப்படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
படத்தின் பார்ட்-2 வை எதிர் பார்க்கிறோம் என சொல்லும் அளவிற்கு படம் இருப்பதாகவும் ரசிகர்கள் தெரிவித்துள்ளனர். அட்லீயின் வெற்றி படங்களின் வரிசையில் “ஜவான்” படமும் இடம் பெற்றுள்ளது எனவும், இந்த படம் பிளாக் பஸ்டர் என்றும் ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.
Discussion about this post