இஸ்ரோவின் புரியாத புதிர்..!!
இது கிட்டத்தட்ட நாம் முன்பு முன் வைத்த கேள்வி போன்றே ஒரு நிருபர் கேட்டுள்ளார். இந்த கேள்விக்கான இஸ்ரோ சார்பான பதிலை நான் இப்படி புரிந்துகொள்கிறேன், வின் கலம் தரையில் இறங்கும் இடத்தில் இருக்கும் பொருட்களின் உயரம் எவ்வளவு என்று தெரிந்தால், அதை பொறுத்து ஒரு இடத்தில் இறங்கலாமா வேண்டாமா என்ற முடிவினை எடுக்கலாம்.
உயரமான பெரிய பொருட்கள் இருக்கும் இடத்தை தவிர்த்துவிடலாம் அல்லவா? மேலும் Rover செல்லும் இடங்களில் அது எதிர்கொள்ளும் பொருட்களை அளவிட வேண்டும் அல்லவா? அப்படி ஒரு பொருளின் உயரத்தினை, சூரிய வெளிச்சத்தால் ஏற்படும் அதன் நிழலை வைத்து தீர்மானிப்பதாக கூறுகிறார்.
அந்த நிழலினை கருப்பு வெள்ளை படத்தில் அளவிடுவதே சரி என்றும், அதனாலேயே சந்திரயான் அனுப்பிய படங்கள் கருப்பு வெள்ளையாக உள்ளது என்கிறார்.
இந்த பதிலை பற்றி என்ன நினைக்குறீங்க நண்பர்களே? கலர் படங்களில் ஒரு பொருளின் நிழலையும், அதன் அடிப்படையில் அதன் அளவையும் கணக்கிடுவதில் என்ன சிரமம் இருக்கும் என்று யாராவது விளக்கினால் சிறப்பாக இருக்கும்.
ஒரு வேளை இறைவன் நமது கண்களை கருப்பு வெள்ளையாக தெரியும் வண்ணம் படைத்திருந்தால், இன்னும் சிறப்பாக பொருட்களையும் அதன் அளவினையும் நம்மால் பார்க்க முடிந்திருக்குமோ?
மேலும் ஒரு இடத்தில் இருக்கும் பொருட்களையும், அங்கிருக்கும் மேடு பள்ளங்களையும் மிக துள்ளியமாக அளவிட, இன்று சிறப்பான தொழில்நுட்பங்கள் உள்ளது. அவற்றை விடுத்து நிழலை வைத்து பொருளின் அளவை கணக்கிடுவதாக கூறுவது நம்பும்படியாக இல்லை..
Discussion about this post