Wednesday, July 9, 2025
Madhimugam
  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்
  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்
Madhimugam
No Result
View All Result

’’வாயிலையே வடை சுட்டு காற்றில் கம்பு சுற்றும் பாஜக”… அண்ணன் வடிவேலுவிடம் போட்டிபோடும் மோடி… அமைச்சர் உதயநிதி செய்த தரமான சம்பவம்..!

by Dharma
September 7, 2023

‘சனாதன ஒழிப்பு’ மாநாட்டில், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசிய கருத்துகளை பா.ஜ.கவினர் திரித்து அவதூறு பரப்பி வருவது குறித்து தெளிவான விளக்கத்தை அமைச்சர் உதயநிதி வெளியிட்டுள்ளார்.

அதில் குறிப்பிட்டுள்ளதாவது;

சில விஷயங்களை நம் கழகத்தினருக்குத் தெளிவுபடுத்த வேண்டியது என் கடமை. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ‘தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள்-கலைஞர்கள் சங்கம் ’கடந்த 2-ஆம் தேதி ஏற்பாடு செய்திருந்த ‘சனாதன ஒழிப்பு’ மாநாட்டில் பங்கேற்று உரையாற்றினேன்.

Udhayanidhi: சனாதனப் பேச்சைவைத்து I.N.D.I.A கூட்டணிக்குச் சிக்கலை ஏற்படுத்த  முயல்கிறதா பாஜக?!| Is BJP trying to divert the Udhayanithi's speech against  INDIA alliance? - Vikatan

‘கடந்த 9 ஆண்டுகளாக வாயிலேயே வடை சுட்டுக்கொண்டிருக்கிறீர்களே. எங்களின் நலனுக்காகச் செய்த திட்டங்கள் என்ன’ என்று ஒட்டுமொத்த இந்தியாவும் ஓரணியில் திரண்டு நின்று, நிராயுதபாணியாக நிற்கும் ஒன்றிய பாசிச பா.ஜ.க. அரசைக் கேள்வி கேட்க தொடங்கியுள்ள நிலையில், த.மு.எ.க.ச மாநாட்டில் நான் பேசிய பேச்சை, ‘இனப்படுகொலை செய்யத் தூண்டினேன்’ என்று திரித்து அதையே மக்களிடம் இருந்து தங்களைக் காத்துக்கொள்ளும் ஆயுதமாக நினைத்து காற்றில் கம்பு சுற்றிக்கொண்டு இருக்கின்றனர் பா.ஜ.க. தலைவர்கள்.

இதில் ஆச்சர்யம் என்னவென்றால், அமித்ஷா போன்ற ஒன்றிய அரசின் அமைச்சர்கள், பா.ஜ.க. ஆளும் மாநில முதலமைச்சர்கள் என யார்யாரோ இந்த அவதூறை மையமாக வைத்து, என் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கின்றனர்.

நியாயமாகப் பார்த்தால், மதிப்புக்குரிய பொறுப்பில் இருந்துகொண்டு அவதூறு பரப்பும் இவர்கள் மீது நான்தான் கிரிமினல் வழக்கு, நீதிமன்ற வழக்குகளைத் தொடுக்க வேண்டும். ஆனால், இவர்களுக்குப் பிழைப்பே இதுதான், இதைவிட்டால், பிழைப்பதற்கு அவர்களுக்கு வேறு வழி தெரியாது என்பதால், ‘பிழைத்துப் போகட்டும்’ என்று விட்டுவிட்டேன்.

தந்தை பெரியாரிடம் இருந்து வந்த பேரறிஞர் அண்ணாவால் நிறுவப்பட்ட தி.மு.கழகத்தின் இரண்டு கோடி தொண்டர்களில் நானும் ஒருவன். நாங்கள் எந்த மதத்துக்கும் எதிரி இல்லை என்பதை அனைவரும் அறிவார்கள்.

மதங்களைப் பற்றி அண்ணா அவர்கள் கூறியது இன்றும் பொருத்தமாக இருப்பதால் அதை இங்கே சுட்டிக்காட்ட விரும்புகிறேன். “எப்போது ஒரு மதம் மக்களை சமத்துவத்தை நோக்கி வழிநடத்துகிறதோ, அவர்களுக்கு சகோதரத்துவத்தை கற்பிக்கிறதோ, அப்போது நானும் ஆன்மிகவாதிதான். எப்போது ஒரு மதம் சாதியின் பெயரால் மக்களை பிளவுபடுத்துகிறதோ, அவர்களுக்கு தீண்டாமையையும் அடிமைத்தனத்தையும் கற்பிக்கிறதோ, அப்போது அந்த மதத்தை எதிர்த்து நிற்கும் முதல் ஆள் நானாகத்தான் இருப்பேன்” என்றார் அண்ணா.

`பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்பதை கற்பிக்கும் மதங்கள் அனைத்தையும் நாங்கள் மதிக்கிறோம். ஆனால், இவை எதையும் புரிந்துகொள்ள விரும்பாமல், வரும் நாடாளுமன்றத் தேர்தலில் வெறும் அவதூறை மட்டுமே நம்பி களமிறங்கியுள்ள மோடி அண்ட் கோவை பார்க்கும்போது ஒரு பக்கம் பரிதாபமாகவும் இருக்கிறது. ‘சும்மா இருக்கிறதுன்னா சும்மாவா’ என திரைப்பட நடிகர் அண்ணன் வடிவேலு அவர்கள் ஏற்று நடித்த கதாபாத்திரத்திடம் போட்டி போடும் அளவுக்கு மோடி அவர்கள் கடந்த 9 ஆண்டுகளாக சும்மாவே இருந்துள்ளார்.

modi horoscope in tamil- what made modi to become the prime minister of  india? horoscope tells. | 2029ம் ஆண்டு வரை மோடியை அசைக்க முடியாது..! ஜாதகம்  சொல்லுது..!

இடையிடையே பணத்தை மதிப்பிழக்கச் செய்வது, குடிசைகளை மறைத்து சுவர் எழுப்புவது, புதிய நாடாளுமன்றக் கட்டடம் கட்டுவது, அங்கு செங்கோல் நடுவது, நாட்டின் பெயரை மாற்றி விளையாடுவது, எல்லையில் நின்றபடி வெள்ளைக்கொடிக்கு வேலை வைப்பது… என வடிவேலு அண்ணனின் `23-ஆம் புலிகேசி’ கதாபாத்திரத்தோடு போட்டிபோட்டு நகைச்சுவை செய்துகொண்டுள்ளார்.

திரையில் வடிவேலு அண்ணனை ரசிக்க முடிந்தது. நிஜத்தில் இவர்களை… மக்களின் வாக்குகளைப் பெற எந்தளவுக்கும் சென்று, இவர்கள் நாடக அரசியலைச் செய்வார்கள் என்பது இதிலிருந்து தெரிகிறது.

நான் இதை நகைச்சுவைக்காக மட்டும் சொல்லவில்லை, ஏழை எளிய மக்களின் வாழ்வை உயர்த்தும் ‘புதுமைப்பெண்’ திட்டம் போன்றோ, முதலமைச்சரின் காலைச் சிற்றுண்டி திட்டம் போன்றோ, கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் போன்றோ ஏதாவது ஒரு முற்போக்குத் திட்டம் கடந்த 9 ஆண்டுகால ஒன்றிய அரசிடம் இருந்து வந்திருக்கிறதா? மதுரை எய்ம்ஸை கட்டினார்களா? கலைஞர் நூற்றாண்டு நூலகத்தைப் போன்று ஏதாவது அறிவியக்கத்தை முன்னெடுத்தார்களா?

‘சனாதனம் என்றால் என்ன’ என்பதை வீட்டினுள் பத்திரமாக அடுக்கிவைத்திருக்கும் புத்தகங்களில் இருந்து தேடிக்கொண்டிருக்கும் எடப்பாடி அவர்களே, கொடநாடு கொலை-கொள்ளை வழக்குகளிலும், ஊழல் வழக்குகளில் இருந்தும் தப்பிக்க, நீங்கள் ஆட்டுத் தாடிக்குப்பின் நீண்டநாள் ஒழிந்திருக்க முடியாது. ஆடு ஒருநாள் காணாமல் போகும்போது, நீங்கள் என்ன ஆகப்போகிறீர்கள் என்பதையும் நினைவில் கொள்ளுங்கள்.

‘என்ன வாய் மட்டும் வேலை செய்யுது’ என்பது போல, மீடியாவை சந்திப்பது மட்டுமே மக்கள் பணி என நினைக்கும் சிலர் நான் பேசாததைப் பேசியதாகத் திரிக்கும் அவதூறுகளை வைத்து, வாயை வாடகைக்கு விட்டுப் பிழைப்பு நடத்தி வருகின்றனர். அவர்களின் பிழைப்பில் நான் மண் அள்ளிப்போட விரும்பவில்லை, பிழைத்துப்போகட்டும்.

நாம் எதிர்க்கட்சியாக இருந்தபோது கொரோனா காலத்தில் அரிசி, மளிகை, காய்கறி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை நலத்திட்ட உதவியாக வழங்க வீடு வீடாக ஏறிக்கொண்டிருந்தோமே அப்போது அ.தி.மு.க.வும் பா.ஜ.க.வும் என்ன செய்தன? மணி அடித்தபடியும், விளக்கு பிடித்தபடியும் கொரோனா கிருமியை ஒழிக்கப் போராடிக் கொண்டு இருந்தன.

இன்று நாம் ஆளுங்கட்சி. இன்றும் நாம் கலைஞரின் நூற்றாண்டை மக்களுக்குப் பயனுள்ள வகையில் கொண்டாட, நலத்திட்ட உதவிகளை வழங்க வீடு வீடாக ஏறி இறங்கிக்கொண்டு இருக்கிறோம். அ.தி.மு.க.வோ ஆடலும் பாடலும் பின்னணியில், புளி சாத மாநாடுகளை நடத்திக்கொண்டு, விழுவதற்குக் கால்கள் கிடைக்காதா, ஊர்ந்து போக ஏதாவது ஃபர்னிச்சர் கிடைக்காதா எனத் தேடிக் கொண்டிருக்கிறது.

ஆமாங்க… சசிகலாவை விமர்சிக்கமாட்டேங்க..!'- யூ-டர்ன் அடித்த எடப்பாடி பழனிசாமி  - Bhoomitoday

ஒன்றிய பிரதமர் மோடியோ கொரோனா நிதியாகத் திரட்டிய ‘பி.எம். கேர்ஸ்’க்கு கணக்கு சொல்ல வேண்டிய அவசியம் இல்லை என்றபடி, 7.5 லட்சம் கோடி ரூபாய் என்ன ஆனது என்ற சி.ஏ.ஜி. கேள்விக்குப் பதிலளிக்காமல், ஊரில் இருந்தால், மணிப்பூர் பற்றிக் கேள்வி கேட்பார்களே என்று பயந்து நண்பர் அதானியை அழைத்துக்கொண்டு ஊர் ஊராகச் சுற்றிக்கொண்டு இருக்கிறார். உண்மையைச் சொல்வது என்றால், மக்களின் அறியாமைதான் இவர்களின் நாடக அரசியலுக்கான மூலதனம்.

மணிப்பூர் கலவரத்தைத் தூண்டிவிட்டு 250-க்கும் மேற்பட்டோர் படுகொலை செய்யப்படக் காரணமாக இருந்தது, 7.5 லட்சம் கோடி ரூபாய் ஊழல்… போன்றவற்றைத் திசை திருப்பத்தான் மோடி அண்ட் கோ இப்படி சனாதன கம்பை சுற்றிக்கொண்டு இருக்கிறது. இவர்களின் கைகளில் தான் மொத்தமாக சிக்கியுள்ளதால், ‘ஒரே நாடு ஒரே தேர்தலா… நடத்திடுவோம் எஜமான்’, ‘பாரதம்னு மாத்துறீங்களா… மாத்திடுங்க ஓனர்’ என்று மோடியின் நாடகத்தையே இங்கே அரங்கேற்றிக்கொண்டு இருக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள்.

சாமியார்களுக்குத்தான் இந்தக் காலத்தில் அதிக விளம்பரம் தேவைப்படுகிறது. அப்படி ஒரு சாமியார் இடையில் புகுந்து என் தலைக்கு 10 கோடி ரூபாய் விலை வைத்துள்ளார். என் தலையைவிட ‘முற்றும் துறந்தவரிடம் எப்படி 10 கோடி’ என்பதுதான் எனக்கு வியப்பாக இருக்கிறது. தவிர பலர் என் மீது நாட்டின் பல்வேறு காவல் நிலையங்களிலும், மாண்பமை நீதிமன்றங்களிலும் புகார் அளித்து வருவதாகத் தெரிகிறது.

இந்த நிலையில், ‘கொலை மிரட்டல் விடுத்த அந்தச் சாமியாரை கைது செய்ய வேண்டும்’ என்று கோரி நம் கழகத்தினர் தமிழ்நாட்டின் பல்வேறு காவல் நிலையங்களில் புகார் அளித்து வருவதாகவும், அந்தச் சாமியாரின் உருவ பொம்மையை எரிப்பது, அவரின் படத்தைக் கொளுத்துவது, கண்டன சுவரொட்டிகளை ஒட்டுவது போன்ற செயல்களில் ஈடுபடுவதாகவும் தெரிகிறது.

வெட்டப்பட்டு கொளுத்தப்பட்ட உதயநிதியின் தலை; ரூ.10 கோடி சன்மானமும்  அறிவிப்பு.. அதிரவைக்கும் உபி சாமியார்.! - Tamil Spark

நாம் பிறருக்கு நாகரிகம் கற்றுத் தருபவர்கள். நம் தலைவர்கள் நம்மை அப்படித்தான் வளர்த்தெடுத்துள்ளனர். எனவே, அதுபோன்ற காரியங்களை நம் இயக்கத் தோழர்கள் அறவே தவிர்க்குமாறு கேட்டுக்கொள்கிறேன். தவிர, நமக்கு இயக்கப் பணி, மக்கள் பணி என எண்ணிலடங்கா பணிகள் காத்திருக்கின்றன.

முத்தமிழறிஞர் கலைஞரின் நூற்றாண்டை முன்னிட்டு அரசின் சார்பிலும், கழகத்தின் சார்பிலும் பல பணிகளை நம் மாண்புமிகு முதலமைச்சர்-கழகத் தலைவர் அவர்கள் நமக்கு வழங்கியுள்ளார்கள். இளைஞர் அணியின் 2-வது மாநில மாநாட்டுக்கான பணிகள், நாடாளுமன்றத் தேர்தல் பணிகள்… என ஏராளமான பணிகள் நமக்கு முன் உள்ளன.

இவ்வளவு வேலைகள் இருக்கும்போது சாமியாரின் மீது வழக்கு போடுவது, உருவ பொம்மையை எரிப்பது.. போன்ற, நேரத்தை வீணடிக்கக்கூடிய பணிகளில் நம் கழகத்தினர் எவரும் ஈடுபடக்கூடாது என்று கேட்டுக்கொள்கிறேன்.

என் மீது தொடரப்பட்டுள்ள வழக்குகளை, கழகத் தலைவர் அவர்களின் வழிகாட்டுதலும், தலைமைக் கழகத்தின் ஆலோசனையைப் பெற்று சட்டத்துறையின் உதவியுடன் சட்டப்படி எதிர்கொள்வேன் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

எனக்கு ஆதரவு தெரிவித்து கருத்துகளைப் பகிர்ந்த தோழமை கட்சியின் தலைவர்களுக்கும், மனித உரிமை செயற்பாட்டாளர்களுக்கும் என் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். மேலும் ‘சனாதன தர்மம்’ எதை வலியுறுத்துகிறது, அதில் அப்படி என்னதான் சொல்லப்பட்டுள்ளது’ என்பதை நாடு தழுவிய அளவில் ஒரு பேசுபொருளாக மாற்ற காரணமாக அமைந்த ‘சனாதன ஒழிப்பு மாநாட்டுக்கு’ம், அதை ஒருங்கிணைத்த த.மு.எ.க.ச தோழர்களுக்கும் இந்த நேரத்தில் நான் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். அம்மாநாட்டுக்கு நான் செல்ல காரணமாக இருந்த அண்ணன் ‘புதுகை பூபாளம்’ பிரகதீஸ்வரன் அவர்களுக்கு என் அன்பு.

தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர், இனமான பேராசிரியர் புகழ் ஓங்கட்டும். தொடர்ந்து அவர்களின் கொள்கை வழியில் நடக்க உறுதியேற்போம். நன்றி, வணக்கம். உங்கள் உதயநிதி எனக் குறிப்பிட்டிருந்தார்.

Tags: அண்ணாமலைஅமைச்சர் உதயநிதி ஸ்டாலின்எடப்பாடி பழனிசாமிதிமுக vs 2அதிமுகதிமுக vs பாஜகமோடி
ADVERTISEMENT

Related Posts

Indian jets were shot down
அரசியல்

இந்திய விமானங்களை பாகிஸ்தான் சுட்டுவீழ்த்தியதா? – ஜெனரல் அனில் சௌஹான் பேட்டி!

அரசியல்

‘இந்தியாவுக்கு பாடம் கற்று கொடுக்க நினைத்தோம்… பிரம்மோஸ் வந்து விழுந்துட்டு!’ – பாக் பிரதமர் கதறல்

அரசியல்

உயிரே போனாலும் கன்னடம் வாழ்க என்று சொல்ல மறுத்தவர் ஜெயலலிதா- நயினார் நாகேந்திரன் சொன்ன பிளாஸ்பேக்

Next Post

ஜவான் படம் எப்படி இருக்கு..? மதிமுகம் ரிவியூ..!!

  • Trending
  • Comments
  • Latest

விலையும்  கம்மியா இருக்கு..? மொபைலும்   பெஸ்டா இருக்கே..!!  என ஆச்சரிய பட வைக்கும் விவோ..!!   

கணவனாக இருந்தாலும் அத்துமீறினால் பாலியல் வன்கொடுமை தான் – உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!

வங்க கடலில் புதிய புயல் : தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்….!!

சந்திரகிரகணம் முடிந்தவுடன் செய்ய வேண்டிய பரிகாரங்கள்..?

எவ்வளவு நேரம் பூஜை அறையில் விளக்கு ஏறியலாம்..

நெற்றியில் போட்டு வைத்து கொள்வதன் காரணம் என்ன …??

வாழைப்பழத்தின் ஆரோக்கிய பலன்கள்…

தமிழகம் முழுவதும் இன்று புதிய கவுன்சிலர்கள் பதவியேற்பு…!!

Heavy rain in 13 districts of Tamilnadu

13 மாவட்டங்களில் இன்று கனமழை… சென்னை வானிலை ஆய்வு மையம்!

விமானவிபத்தில் 133 பேர் உயிரிழப்பு… விபத்துக்கு காரணம் என்ன?

ஊர்வசி மகள் சினிமாவில் அறிமுகம் ; தந்தை சொன்ன உருக்கமான தகவல்கள்!

வாசிம் அக்ரம் ஏன் அழுதபடி இருக்கிறார்? – சிலையால் ஒரே சிரிப்பு

Trending News

Heavy rain in 13 districts of Tamilnadu

13 மாவட்டங்களில் இன்று கனமழை… சென்னை வானிலை ஆய்வு மையம்!

விமானவிபத்தில் 133 பேர் உயிரிழப்பு… விபத்துக்கு காரணம் என்ன?

ஊர்வசி மகள் சினிமாவில் அறிமுகம் ; தந்தை சொன்ன உருக்கமான தகவல்கள்!

வாசிம் அக்ரம் ஏன் அழுதபடி இருக்கிறார்? – சிலையால் ஒரே சிரிப்பு

ADVERTISEMENT

About Madhimugam Tholaikkatchi

MadhimugamTV is owned by the RMT NETWORK PRIVATE LMITED PRIVATED established July14th 2016. Madhimugam TV is a Free to Air (FTA) channel available on all major Cable/MSO Networks in Tamil Nadu and on all major MSO Networks across India and worldwide.

Follow Us

Policies

  • About Us
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact Us

Quick Links

  • உலகம்
  • இந்தியா
  • தமிழ்நாடு
  • அரசியல்

Contact Us

RMT Network Private Limited
Real Tower, 4th Floor,
No.52 Royapettah High Road,
Mylapore, Chennai – 600 004.
Email: info@madhimguam.com

For Advertising Contact
Ph : 91+9884060451
Email: vigneshd@madhimugam.com

  • About Us
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact Us

© 2022 Madhimugam TV Developed By Chennai Creative Solutions.

  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்

© 2022 Madhimugam TV Developed By Chennai Creative Solutions.