அண்ணனை கொலை செய்த தம்பி போலீசில் சிக்கியது எப்படி..?
சேலம் மாவட்டம் கொம்மக்காட்டை சேர்ந்த வினோத் என்பவர் காட்டெருமை முட்டி தலையில் காயம் ஏற்பட்டு இருப்பதாக கூறி ஞாயிற்று கிழமை அன்று சேலம் அரசு மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டார். தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப் பட்டிருந்த அவர்.., சிகிச்சை பலனின்றி வினோத் உயிர் இழந்தார்.
இது குறித்து காவல் துறைக்கு தகவல் கொடுக்கப் பட்டுள்ளது.., இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்திய சேலம் காவல் துறையினர்.., வினோத்தின் தம்பி விவேக், வினோத்தின் தலையில் கல்லை தூக்கி போட்டு கொலை செய்த சம்பவம் தெரிய வந்துள்ளது. பின் விவேக்கை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
விவேக்கிடம் நடத்திய விசாரணையிலேயே வினோத் எதற்காக கொலை செய்யப்பட்டார் என்பது பற்றி தெரிய வந்தது. வினோத் காதலித்த பெண்ணை தான் அவரின் தம்பி விவேக் 5 வருடங்களுக்கு முன் திருமணம் செய்துள்ளார்.
திருமணத்திற்கு பிறகும் விவேக்கின் மனைவி பவித்ரா அண்னன் வினோத்துடன் நெருங்கி பழகி வந்துள்ளார் இருவரும் அடிக்கடி விவேக்கிற்கு தெரியாமல் தனிமையிலும் இருந்துள்ளனர். இவர்களின் பழக்கம் குறித்து விவேக்கிற்கு தெரிய வர இருவரையும் கண்டித்து இருக்கிறார். இருந்தும் இருவரும் கேட்காமல் பழகி வந்துள்ளனர்.
இவர்கள் தனிமையில் இருந்ததை விவேக் பார்த்து விட.., வினோத்திடம் சண்டையிட்டுள்ளார் பவித்ராவின் கணவர் விவேக் வாக்குவாதம் அதிகமாக ஆத்திரத்தில் அண்ணனை, தம்பியே கொலை செய்துள்ளார்.
கொலை செய்தது தெரிந்தால் எங்கு மருத்துவ மனையில் சிகிச்சை அளிக்க மாட்டார்களோ என்ற பயத்தில் மாடு முட்டியதாக கூறினே என போலீஸ் விசாரணையில் விவேக் ஒப்புக்கொண்டுள்ளார். விசாரணை குறித்து காவல்துறையினர் விவேக்கை சிறையில் அடைத்தனர்.
Discussion about this post