குடியாத்தம் முனிஸ்வரன் கோவிலில் சிலை கடத்தல்..! தீவிர போலீஸ் விசாரணை.
குடியாத்தம் அருகே முனிஸ்வரன் கோவிலில் இருந்த மூலவர் கல் சிலை கடத்தல் மற்றும் சிலைகள் சேதம் போலீஸ் விசாரணை.
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த பாக்கம் கிராமத்தில் காளியம்மன் கோவில் அருகே முனீஸ்வரன் கோவில் உள்ளது. காத்து கருப்பு போன்ற பிரச்சனைகளை தீர்ப்பவர் என்றும் காவல் தெய்வமாய் திகழும் முனிஸ்வரரை கடந்த மூன்று ஆண்டுகளாக பக்தர்கள் சிறப்பு வழிபாடுகள் செய்து வழிபட்டு வந்த நிலையில்.
முனீஸ்வரன் கோவிலில் நேற்று இரவு மர்ம நபர்கள் கோவிலில் இருந்த முனீஸ்வரர் மூலவர் சிலையை திருடி சென்றுள்ளனர். மேலும் அங்குள்ள சிலைகளை சேதப்படுத்தி உள்ளனர். அவ்வழியாக சென்ற பக்தர்கள் மூலவர் சிலை இல்லாததையும் சிலைகளை சேதப்படுத்தியதையும் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
பின்னர் இந்த சம்பவம் குறித்து காவல் துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. தகவலின் பெயரில் அங்கு வந்த பரதராமி காவல்துறையினர் மற்றும் தகவல் அறிந்து வந்த குடியாத்தம் டிஎஸ்பி ராமமூர்த்தி, சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றார்.
பின் ஊர் பொதுமக்களிடம் புகார் பெற்றுக் கொண்டு சிலை கடத்தல் வழக்கு பதிவு செய்யும்படி பரதராமி போலீசாருக்கு டிஎஸ்பி உத்தரவிட்டுள்ளார். சாலையோரம் உள்ள முனிஸ்வரன் கோவிலின் சிலைகளை உடைத்து சிலைகள் கடத்தப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.