உரிய ஆவணங்கள் இல்லாமல் மணிப்பூர் சென்ற மியான்மர் அகதிகள்..!!
மணிப்பூரில் பற்றி எறியும் தீ.., கலவரம் குறித்து மணிப்பூர் அரசு நடவடிக்கை எதுவும் எடுக்காததால் ஆங்காங்கே பொது மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் மணிப்பூரில் நிலவி வரும் பதற்றங்களுக்கு மத்தியில் 700க்கும் மேற்பட்ட மியான்மார் அகதிகள் உரிய ஆவணங்கள் இல்லாமல் மணிப்பூர் எல்லைக்குள் நுழைந்தது எப்படி என எல்லையை பாதுகாத்து வரும் அஸ்ஸாம் ரைபிள்ஸ் படை பிரிவினரிடம் மாநில அரசு விளக்கம் கேட்டுள்ளது.
முன்னதாக அஸ்ஸாம் ரைபிள்ஸ் படை பிரிவினர் தலைமையகத்திற்கு அனுப்பியிருந்த அறிக்கையில் கடந்த 23ம் தேதி சந்தேல் மாவட்டம் வழியாக 718 மியான்மார் அகதிகள் எல்லையை தாண்டி நுழைந்துள்ளனர்.
இதனை தொடர்ந்து உரிய ஆவணங்கள் இன்றி எல்லையை தாண்டி வந்த மியான்மார் அகதிகள் மூலம் ஆயதங்கள்.., மற்றும் வெடி பொருட்கள் ஏதாவது கொண்டு வரப்பட்டுள்ளதா.., அதற்கு விளக்கம் கொடுக்கும் படி அஸ்ஸாம் ரைபிள்ஸ் படை பிரிவினரிடம் மணிப்பூர் மாநில அரசு கேட்டுக் கொண்டுள்ளது.
மேலும் சட்ட விரோதமாக நுழைந்த மியான்மார் அகதிகளின் புகைப்படங்கள் மற்றும் பயோ மெட்ரிக் விவரங்கள் குறித்தும் கேட்டுள்ளனர். சந்தேகிக்கும் படி மேலும் வேறு யாராவது நுழைந்தால் காவல் துறையினரிடம் உடனே தெரிவிக்குமாறு அரசு உத்தரவிட்டுள்ளது.
Discussion about this post