குன்னூரில் நடந்த கோர விபத்து..!! முதல்வர் அறிவித்துள்ள திடீர் அறிவிப்பு..!!
தென்காசியில் இருந்து நீலகிரி வழியே சென்று கொண்டிருந்த பேருந்து, குன்னூர் பகுதியில் சென்று கொண்டிருந்த பொழுது 100 அடி பள்ளத்தில் விழுந்து பெரும் விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் 8 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
தென்காசி மாவட்டத்தில் இருந்து தனியார் பேருந்து மூலம் ஊட்டிக்கு சுற்றி பார்பதற்காக சென்ற சுற்றுலா பயணிகள் மீண்டும் அதே பேருந்தில் இன்று அதிகாலை ஊட்டியில் இருந்து தென்காசிக்கு திரும்பிக் கொண்டிருந்த நிலையில், குன்னூர் பர்லியாறு அருகே எதிர்பாராத விதமாக பள்ளத்தில் கவிழ்ந்து பெரும் விபத்துக்குள்ளானது…
இந்த கோர விபத்தில் பேருந்தில் பயணம் செய்த முப்புடாதி (67), முருகேசன் (65), இளங்கோ (64), தேவிகா (42), கௌசல்யா (29) மற்றும் நிதின் (15) ஆகியோர் உள்ளிட்ட 8 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
பின்னர் இது குறித்து காவல்துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது.., தகவலின் பெயரில் அங்கு சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உயிரிழந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் விபத்து நடந்த இடத்திற்கு சென்று மேற்பார்வையிட்டார்.., குன்னூர் விபத்து பகுதியில் மீட்பு பணி நடைபெற்று வருகிறது..
மேலும் நிவாரண பணிகளை மேற்பார்வையிட்டு துரிதப்படுத்தி வருகின்றனர். விபத்தில் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கபட்டுள்ளவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதனிடையே, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதல்வர் இரங்கல் தெரிவித்திருக்கிறார். இது தொடர்பாக தமிழக முதல்வர் வெளியிட்டுள்ள அறிக்கையில், விபத்தில் எட்டு பேர் உயிரிழந்தனர் என்ற துயரமான செய்திகளை கேட்டு மிகுந்த வேதனை அடைந்தேன்.
காயம் அடைந்தவர்களுக்கு சிறப்பு சிகிச்சை வழங்க அறிவுறுத்தி உள்ளேன். உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கும் அவரது உறவினர்களுக்கும் எனது ஆறுதலையும் ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக் கொள்வதோடு உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்ச ரூபாயும், படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு தலா ரூ.1 லட்சம் ரூபாயும், லேசான காயம் அடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு தலா 50000 ரூபாயும் முதலமைச்சர் பொது நிவாரண நிதியில் வழங்க உத்தரவிட்டு உள்ளதாக தெரிவித்துள்ளார்..
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..