இந்த திட்டம் இருக்க அப்போ இனி விவசாயிகள் ஏன் தண்ணீருக்கு கஷ்டப்படனும்..?
பாசனத்திற்கான மின்மோட்டார் பம்பு செட்டுக்கு 15 ஆயிரம் மானியமாக வழங்கும் திட்டத்தில் விவசாயிகள் இணைந்து பயன்பெறுமாறு அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அறிவுறுத்தியுள்ளார்.
விவசாயத்திற்கு பழைய, திறன்குறைந்த மின் மோட்டார் பம்புசெட்டுகளைத் தொடர்ந்து பயன்படுத்துவதால், மின்சாரப் பயன்பாடு அதிகமாவதோடு. பாசன நேரமும் அதிகரிக்கிறது.
இந்நிலையில், விவசாயிகளின் நலனுக்காக, மின்சார பயன்பாட்டுத் திறனை அதிகரித்தல் மற்றும் அதிகமான பாசன நீரினை குறைந்த செலவில் இறைத்தல் ஆகிய நோக்கத்திற்காக, புதிய மின்மோட்டார் பம்புசெட்டுகளை விவசாயிகள் வாங்குவதற்கான மானியம் பொறியியல் துறையால் வழங்கப்பட்டு வருகிறது.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில், புதிய மின் மோட்டார் பம்புசெட் நிறுவுவதற்கும், புதிதாக அமைக்கப்பட்டுள்ள கிணற்றுக்கு புதிய மின் மோட்டார் பம்புசெட் வாங்குவதற்கும் 5 ஏக்கர் வரை நிலம் வைத்திருக்கும் சிறு, குறு விவசாயிகளுக்கு இத்திட்டத்தில் மானியம் வழங்கப்படும் என்றும், இத்திட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் பிரிவினைச் சார்ந்த சிறு, குறு விவசாயிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..