திருச்செந்தூர் கோவில் வரலாறு..!! முருகரை வழிபட வேண்டிய முறை..!!
திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு சென்று வழிபடுவதால் கிடைக்கும் பலன்கள். என்ன அவரை செந்திலாண்டவர் என அழைக்க காரணம் என்ன..? மற்ற கோவில்களை விட இங்கு மட்டும் ஏன் கடலுக்கு பக்கத்தில் முருகன் இருக்கிறார் என.. இந்த ஆன்மீக பதிவில் படிக்கலாம்..
முருகனின் ஆறுபடை வீடுகளில் இரண்டாவது படைவீடாக விளங்கும் திருச்செந்தூர் கோவில் தூத்துக்குடி மாவட்டத்தில் அமைந்துள்ளது. சூரபத்மனை வென்று அதன் நினைவாக கட்டப்பட்டுள்ள இக்கோவிலானது 2000 ஆண்டுகள் பழமை வாய்ந்த கோவில் என அழைக்கப்படும் முருகனின் இப்படைவீட்டை, சிலப்பதிகாரம் “திருச்சீரலைவாய்” என்று அழைக்கப்பட்டதாகச் சொல்கிறது.
பிறவி பெறுங்கடலிலே விழுந்த நம்மை காப்பாற்றுவதற்காக கடலோரத்திலே நின்ற படியே நம்மை பாருத்துக் கொண்டு இருக்கிறார்.. அப்படி கடலுக்கு அருகே நிற்பதால தான் அவரை நாம் செந்தில் ஆண்டவர் என அழைக்கிறோம்…
நம்முடைய பிறவியானது கடல் அலைப்போல அதை செந்தில் என சொல்லுவார்கள்.. இந்த அலையானது மீண்டும் மீண்டும் எப்படி முட்டி மோதி அலைகள் அடித்து கொண்டு இருக்கிறதோ அதுபோல தான் நம் பிறவி பிணியை போக்குவதற்காக நின்று கொண்டிருப்பதால் தான் அவரை செந்தில் ஆண்டவர் என அழைக்கிறார்கள்..
முனிவர்கள் தேவர்களையும் கொடுமை செய்து கொண்டிருந்தார் சூரன்., அவனின் கொடுமையை தாங்க முடியாத முனிவர்கள் சிவபெருமானிடம் சென்று முறையிடுறாங்க அப்போ.. சிவபெருமானின் நெற்றிககண்ணில் இருந்து 6 கண்கள் தோன்றி அதில் இருந்து முருகன் எழுக்கிறார்.. சிவபெருமானின் ஆணைக்கு இணங்க சூரணை சம்ஹாரம் செய்வதற்காக கைலாயத்தை விட்டு திருச்செந்தூருக்கு முருகன் வருகிறார்..
அப்போது சூரணை வதம் செய்யாமல் வியாழன் பாகவனிடன் சூரனிடம் சென்று ஒருமுறை மன்னிப்பு கொடு என சொல்கிறார்.. ஆனால் சூரன் நான் சண்டையிட்டு முருகனின் வேலை எடுப்பதே உறுதி என சொல்ல.. கோபமடைந்த வியாழன் பகவான் முருகரிடம் சென்று நடந்ததை சொல்ல பின்னரே சூரம் சம்ஹாரம் நடக்கிறது..
அப்போது வியாழன் பகவனும்., முனிவர்களும் முருகரை அங்கேயே தங்கும் படி வேண்டுதல் வைக்கிறார்கள் அவ்வாறு வேண்டுதல்கள் வைத்த பின்னரே அங்கு முருகப்பெருமானுக்கு கோவில்கள் எழுந்தது.. அதுவரை “திருச்செந்தாரு” என அழைக்கப்பட்ட அந்த பகுதி.. முருகன் கோவில் தோன்றிய பின் “திருச்செந்தூர்” என அழைக்கப்பட்டது..
இங்கு முருகர் மூன்று அலங்காரத்தில் மட்டும் காட்சி அளிக்கிறார்.., செந்தில் ஆண்டவர், பாலசுப்பிரமணியர், இராஜ அலங்காரத்தில் காட்சி கொடுக்கிறார்.
இங்கு மிகவும் பிரசித்தி பெற்ற திருத்தலமாக வள்ளி குகை காட்சி அளிக்கிறது.. இந்த கோவிலில் குழந்தை வரம் இல்லாத பக்தர்கள் வள்ளிகுகை அருகில் உள்ள மரத்தில் தொட்டில் கட்டி வழிபட்டால் குழந்தை வரம் கிடைக்கும் என்பது ஐதீகம்..
இக்கோவிலில் சென்று நாம் என்ன வேண்டுதல்கள் வைத்தாலும் அதை முருகர் நிறைவேற்றி தந்துவிடுவார்.. ஆனால் பெரும்பாலும் இத்திருத்தலத்தில்.. சொந்த வீடு மனை, வாங்க வேண்டும் என நினைப்பவர்கள்., அரசு வேலை கிடைக்க வேண்டும், திருமண தடை நீங்க பலரும் சென்று வழிபடுவார்கள்.. நாம் வைக்கும் வேண்டுதல்கள் கட்டாயம் நிறைவேற்றப்படும் என்ற நம்பிக்கையுடன் முருகரிடம் வைக்க வேண்டும்…
திருச்செந்தூர் கடலை பலரும் அறிந்திருக்க ஒரு சிலர் மட்டுமே இந்த ஆழி கிணறு பற்றி ஒரு சிலர் மட்டுமே தெரிந்து இருப்பார்கள்.. முருகரை தரிசிப்பதற்கு முன்பு இந்த கிணற்றின் நீரில் குளித்து விட்டு சென்றால் இன்னும் சிறப்பு என சொல்லப்படுகிறது..
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..