தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை தாம்பரத்தில் உள்ள மெட்ராஸ் கிறிஸ்தவக் கல்லூரியில் இந்திய வரலாற்று காங்கிரஸின் 81வது மாநாட்டை தொடங்கி வைத்தார். அப்பொழுது அவர் பேசுகையில், வரலாற்று திரிபுகள் நாட்டை சூழ்ந்துள்ளது என்று பேசினார்.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தம்பரத்திலுள்ள மெட்ராஸ் கிறிஸ்டியன் கல்லூரியில், காங்கிரஸின் 81வது மாநாட்டை தொடங்கி வைத்தார். அப்பொழுது நிகழ்வில் பேசிய அவர், கீழடியில் மிகப் பெரிய அருங்காட்சியகம் திறக்கப்பட இருக்கிறது; உண்மையான வரலாற்றை மக்களிடம் கொண்டு சேர்ப்பதே எங்களது கடமையாக கருதுகிறோம். மேலும் பேசிய அவர், கற்பனை கதைகளை வரலாறாக கூறுவதை ஏற்க கூடாது அறிவியலின் பார்வையை உருவாக்குவதே இன்றைய காலத்திற்கு தேவையானது,
மேலும் பொய்யான வரலாறுகளை புறம் தள்ளியும் மக்களை மைய படுத்தி வரலாறுகள் எழுதப்பட வேண்டும் என்று பேசினார், நம் நாட்டின் மிக பெரும் ஆபத்துகளே வரலாற்று திரிபுகள் தான் என்றும் நாங்கள் பழம்பெருமைகள் மீது பற்று கொண்டவர்கள் தான்; ஆனால் பழமைவாதிகள் அல்ல