தமிழகத்தில் கொட்டி தீர்த்த கனமழை..!! குஷியில் மக்கள்..!!
இந்த மாதம் தொடங்கியதில் இருந்து வெயில் வெளுத்து வாங்கி கொண்டிருந்தது.., இதனால் மக்கள் வெப்பத்தில் அவதி பட்டிருந்தனர்.., நீண்ட நாட்களுக்கு பிறகு மீண்டும் சென்னையில் இன்று கனமழை பெய்துள்ளது.
நீண்ட வெயிலுக்கு பின் மழை பெய்து இருப்பதால் மக்கள் மிகவும் சந்தோசம் அடைந்துள்ளனர். ஆனால் இந்த மழை வாகன ஓட்டிகளுக்கு மிகவும் சிரமத்தை ஏற்படுத்தியுள்ளது.
இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதியில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்துள்ளது. இன்னும் சில மாவட்டங்களில் கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூர், சேலம், நாமக்கல், தர்மபுரி, திருவண்ணாமலை மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அடுத்த 48 மணி நேரத்திற்கு புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதியில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் எனவும்.., வங்க கடலில் உருவாகி இருக்கும் வளிமண்டல காற்று காரணமாக அடுத்த 48 மணி நேரத்திற்கு மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
மேலும் சென்னையின் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யும் என்பதால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பாக செல்லுமாறு வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Discussion about this post