மாஸ்க் அணிந்து கொண்டு பைக் திருடும் மர்ம நபர்..!! போலீசில் சிக்கலாமல் தொடர் பைக் திருட்டு..!!
குடியாத்தத்தில் கோவிலுக்கு சென்ற கூலி தொழிலாளி இருசக்கர வாகனம் திருட்டு சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து போலீசார் விசாரணை.
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த சீவூர் கிராமத்தைச் சேர்ந்த கூலி தொழிலாளி தயாளன் (வயது 40) இவர் நேற்று குடியாத்தம் காமாட்சி அம்மன் பேட்டை பகுதியில் உள்ள சுப்பிரமணி சாமி கோவிலுக்கு சாமி கும்பிடுவதற்காக இரு சக்கர வாகனத்தில் சென்று கோவில் அருகே இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு கோவிலுக்கு சென்றுள்ளார்.
திரும்பி வந்து பார்க்கும்போது தனது இரு சக்கர வாகனம் இல்லாதது கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் குடியாத்தம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார் புகாரின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், ஆய்வு செய்துள்ளனர்.
குடியாத்தம் போலீசார் அங்கே பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்களை பார்க்க போது தயாளன் என்பவருடைய இருசக்கர வாகனத்தை மாஸ் அணிந்து கொண்டு, மர்ம நபர் ஒருவர் திருடி செல்வது தெரியவந்தது.
பின் குடியாத்தம் போலீசார் வழக்கு பதிவு செய்து இருசக்கர வாகனத்தை திருடிய அந்த மர்ம நபர்களை தேடி வருகின்றனர். குடியாத்தம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் தொடர்ந்து இரு சக்கர வாகனங்கள் அதிக அளவு திருடு போவதால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
இருசக்கர வாகனங்களை திருடும் நபர்கள் மீது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..