தலைகவசம் அணியாமல் இருசக்கர வாகனம் ஒட்டிய பள்ளி மாணவர்கள்..!! பலியான மாணவர்கள் மற்றும் முதியவர்..!!
குடியாத்தம் அருகே சாலை விபத்தில் 11 ம் வகுப்பு பள்ளி மாணவர்கள் இருவர் உயிரிழப்பு – குடியாத்தம் நகர போலீசார் விசாரணை.
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த லிங்குன்றம் பகுதியை சேர்ந்த ராணுவ வீரரான கிருஷ்ணன் என்பவரின் மகன் துளசிதாஸ் (வயது 16) அதே பகுதி சேர்ந்த கணேசன் என்பவரின் மகன் அருண் ஹரி பாலாஜி (வயது 16 ) ஆகிய இருவரும் குடியாத்தம் அருகே உள்ள தனியார் பள்ளியில் 11 ம் வகுப்பு படித்து வருகின்றனர்.
இதனிடையே இன்று மதியம் துளசிதாஸ் மற்றும் அருண் அரி பாலாஜி ஆகியோர் இருசக்கர வாகனத்தில் லிங்குன்றம் பகுதியில் இருந்து குடியாத்தம் நோக்கி வந்து கொண்டிருந்தனர்.
அப்பொழுது நெல்லுர் பேட்டை ஏரிக்கரை அருகே எதிரே வந்த மினி வேன் மீது மோதியதில் சம்பவ இடத்திலே துளசிதாஸ் உயிரிழந்தார்.மற்றொருவர் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு செல்லும் போது உயிரிழந்தார்.
மேலும் இந்த விபத்தில் சாலையை கடக்க முயன்ற அதே பகுதியை சேர்ந்த முதியவர் அபிமன்யு என்பவர் மீதும் துளசிதாஸ் ஓட்டி வந்த இருசக்கர வாகனம் மோதி பலத்த காயங்களுடன் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
சாலை விபத்தில் உயிரிழந்த இருவரின் உடலும் உடல் கூறு ஆய்வுக்காக குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் இந்த சம்பவம் குறித்து குடியாத்தம் நகர போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஒரே கிராமத்தைச் சேர்ந்த இரண்டு பள்ளி மாணவர்கள் சாலை விபத்தில் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..