இளைஞர்களின் இதய தேவதை..!! இன்னைக்கு என்ன ஸ்பெஷல்..?
80ஸ் களின் கனவு கன்னி என்றால் சிம்ரன் தேவயானி, ரோஜா, என சொல்லுவார்கள் அதுவே 90ஸ் களின் கன்னி என்றால் அசின், த்ரிஷா, அனுஷ்கா, அதுவே 90ஸ் மற்றும் 2கே கிட்ஸ் களின் கனவு கன்னி யார் என்று பார்த்தால் நம்ப சமந்தா தான் முதல் இடத்தில் இருக்குறாங்க..
தென் இந்தியாவின் கனவு கன்னியாகவும்.., இளைஞ்சர்களின் இதய தேவதையாகவும் இருக்கும் நம்ப சமந்தா இன்று அவரது 37வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார்..
நடிகை சமந்தாவின் நிஜ பெயர் “யசோதா” சென்னை பல்லாவரத்தில் பிறந்து வளர்ந்த சமந்தா தி நகரில் உள்ள ஒரு ஆங்கிலோ இந்தியன் பள்ளியிலும் ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் பட்ட படிப்பை முடித்தார்.., அதன் பின் சினிமா மீது உள்ள ஆர்வத்தால் சிறு சிறு விளம்பரங்களில் நடிக்க தொடங்கினார்..
விண்ணைத்தாண்டி வருவாயா என்ற படத்தின் மூலம் துணை கதா பாத்திரத்தில் தமிழ் சினிமாவில் நடித்து இருப்பார்.., அதன் பின் தெலுங்கில் பிருந்தாவனம், தூகுடு, ஈகா போன்ற படங்களில் நடித்தார்..
தெலுங்கில் வெளியாகி தமிழ் மொழியில் டப்பிங் செய்யப்பட்ட நான் ஈ என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுத்தார்.
அதன் பின் அவருக்கு பல பட வாய்ய்புக்கள் வர ஆரம்பித்தது .., நடிகர் அதர்வாவுடன் இணைந்து நடித்த பானா காத்தாடி என்ற படத்தின் மூலம் பிரபலமானார்..,
நடிகர் விஜய் சமந்தா காம்போ என்றாலே ரசிகர்களுக்கு ஒரு தனி ஸ்பெஷல் குறிப்பாக தெறி, மெர்சல், கத்தி போன்ற படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது..,
சியான் விக்ரம் உடன் 10 என்றதுகுள்ள என்ற படத்தின் மூலம் கியூட் ஆன ரியாக்ஷன்கள் மூலம் ரசிகர்கள் மனதில் தேவதையாக இடம் பிடித்தார்..
தமிழ் தெலுங்கு என பல மொழிகளில் நடிகையாக வளம் வந்து கொண்டிருந்த சமந்தா மஜிலி என்ற தெலுங்கு படத்தில் சைதன்யாவுடன் நடித்திருப்பார் அதிலும் பிரியத்தமா பிரியத்தமா என்ற பாடல் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது..
அந்த படத்தில் இருந்து நடிகர் சைதன்யாவும் சமந்தாவும் காதலித்து திருமணம் செய்துகொண்டனர்., ஆனால் சில பல காரணங்களால் இருவரும் பிரிந்து விட்டனர்.., திருமண வாழக்கையில் இருந்து சமந்தா விலகி விட்டாலும்..
தற்போது வரை சமந்தா ரசிகர்கள் மனதில் நீங்கதா இடம் பிடித்து இதய ராணியாக வாழ்ந்து வருகிறார்..,
ஒரு நடிகையாக நம்மை ரசிக்க வைத்து அவரை நேசிக்கவும் சமந்தா அவர்களுக்கு மதிமுகம் சார்பாக இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்..
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..