உணவில் ஆரோக்கியம் – கொத்தமல்லி ரசத்தில் இவ்வளவு நன்மை இருக்கா..!
நம் வீட்டில், அன்றாடம் சமைக்கும் உணவில் சாம்பார், ரசம், மீன்குழம்பு என அனைத்திலும் மருத்துவம் அடங்கியுள்ளது. அப்படி மருத்துவ குணம் நிறைந்த ரசத்தை பற்றி தெரிந்துகொள்வோம்.
நாம் சாப்பிடுவது சைவமாக இருந்தாலும், அசைவமாக இருந்தாலும், செரிமானமாக ரசம் எடுத்துக்கொள்வோம்.
ரசத்தில் மிளகு, பூண்டு, தக்காளி, கொத்தமல்லி என அனைத்து அடங்கியிருக்கும். இதில் ஒவ்வொன்றுக்கும், ஒவ்வொரு மருத்துவ குணம் உள்ளது.
மிளகு – மார்பு சளியை நீக்கும், குடல் புண்களை குணமாக்கும்.
பூண்டு – உஷ்னத்தை சரி செய்யும்.
தக்காளி – வைட்டமின் சி, வைட்டமின் எ, சத்து அதிகம் இருப்பதால். உடலை குளிர்ச்சியாகவும், வைத்துக்கொள்ள உதவுகிறது.
கொத்தமல்லி வாசனை அதிகம் இருப்பதால் ரத்த அழுத்தம் குறையும்.
சீரகம் – ஜீரணத்திற்கு உதவும்.
ஆனால் நம்மில் பலர் கொத்துமல்லியை உணவில் இருந்து ஒதுக்கிவிடுவோம். இதில் இருக்கும் நன்மைகள் தெரிந்துக்கொண்டால், இனி அதை ஒதுக்கமாட்டோம்.
தினமும் உண்ணும் உணவில் கொத்தமல்லி சேர்த்துக்கொண்டால் உடல் எடை குறையும். இதில் ஆக்ஸிடன்கள் இருப்பதால், நீரிழிவு பாதிக்கபட்டவர்களுக்கு ரத்த ஓட்டம் சீராக இருக்கும்.
கொத்தமல்லியில் உள்ள நொதிகள் கணையத்தில் இன்சுலினை அதிகமாக சுரக்க செய்யும்.
கொத்தமல்லி கெட்ட கொலஸ்ட்ராலை இல்லாமல் இருப்பதால் மாரடைப்பு ஏற்படாமல் தடுக்கும்.
Discussion about this post