37வது பிறந்தநாளை கொண்டாடி வரும் ஹாசினி.. ஜெனிலியா 37..!
ஜெனிலியா:
இயக்குநர் சங்கர் இயகக்கத்தில் வெளியான பாய்ஸ் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நம்ம ஹாசினி தமிழில் மட்டுமல்லாமல் கன்னடம், இந்தி, தெலுங்கு மொழி திரப்படங்களிலும் நடித்துள்ளார்.
பின்னர், நடிகர் விஜய், பரத், ஜெயம் ரவி போன்ற முன்னனி நடிகர்களுடன் நடித்த இவர் சந்தோஷ் சுப்பிரமணியம் படத்தில் ஹாசினியாக குதூகலம், குறும்புத்தனம் மிக்கப் பெண்ணாக நடித்து அனைத்து தரப்பு மக்களையும் கவர்ந்து அவர்களின் மனதில் ஹாசினியாக இடம் பிடித்துள்ளார்.
குறைவான திரைப்படங்களே நடித்திருந்தாலும் ஹாசினியாக இன்றைக்கும் அறியப்படுகிறார்.
திருமண வாழ்க்கை:
ரித்தேஷ் தேஷ்முக் என்ற பாலிவுட் நடிகருடன் இணைந்து நடித்த முதல் படத்திலேயே இருவரும் காதலிக்க தொடங்கினர். பின்னர் 9வருடங்களாக காதலித்து வந்த இவர்கள் கடந்த 2012ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர்.
பாலிவுட்டின் சூப்பர் ஜோடி என்று அழைக்கப்படும் இவர்களுக்கு தற்போது இரண்டு குழந்தைகள் உள்ளது.
பிறந்த நாள்:
தனது எதார்த்தமான நடிப்பும் சுட்டித்தனமான பேச்சு மொழியும் கொண்டு ரசிகர்களை கவர்ந்த இவர் திருமணத்திற்கு பிறகு சினிமாவில் இருந்து விலகி குடும்ப வாழ்வில் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார்.
இந்தநிலையில் ஜெனிலியா இன்று தனது 37வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இவருக்கு ரசிகர்கள் என பல தரப்புகளில் இருந்து வாழ்த்துகள் குவிந்து வரும் நிலையில் நாமும் நமது மதிமுகம் குடும்பத்தினர் சார்பாக இனிய பிறந்த நாள் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறோம்.
-பவானி கார்த்திக்