தீரன் சின்னமலை சிலைக்கு அரசு சார்பில் மரியாதை..! அத்திகடவு அவினாசி திட்டம் வலியுறுத்தல்..!
திமுக சார்பில் தீரன் சின்னமலையின் 219 வது நினைவு நாளில் பல்வேறு மாவட்டங்களில் அவரது முழு உருவ சிலைக்கு அரசு சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது..
ஈரோடு மாவட்டம் அரச்சலூர் அருகே உள்ள ஓடாநிலைப் பகுதியில் அமைந்துள்ளது சுதந்திர போராட்ட வீரர் சின்னமலையின் மணி மண்டபம். இங்கு ஆண்டுதோறும் ஆடி பதினெட்டாம் தேதியான வீரன் சின்னமலை சுதந்திர போராட்ட வீரரை போற்றும் விதமாக அரசு சார்பில் விழா கொண்டாடப்படுவது வழக்கம்.. அதன்படி இன்று ஈரோடு மாவட்ட நிர்வாகம் சார்பில் விழாவுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது.,
நடைபெற்ற நிகழ்ச்சியில் ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜகோபால சுங்கரா , ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜவகர்., தமிழக வீட்டு வசதி வாரிய துறை அமைச்சர் முத்துசாமி., பாராளுமன்ற உறுப்பினர் கே இ பிரகாஷ்., எம்எல்ஏக்கள் அந்தியூர் ஏஜி வெங்கடாசலம் ஈரோடு கிழக்கு இ.வி.கே இளங்கோவன் மற்றும் கொமதேகா ஈஸ்வரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்..
தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து அமைச்சர் முத்துசாமி., சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலை., ., குனாலன் நாடார்.., வல்வில் ஓரி உள்ளிட்டு இருக்கு அரசு சார்பில் மரியாதை செலுத்தப்படுவதாகவும்., திமுக சார்பில் மரியாதை செலுத்தப்பட்டதாகவும் தெரிவித்தார்..
அரச்சலூர் ஓடாநிலையில் அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர்கள் கே.ஏ.செங்கோட்டையன், வேலுமணி, கருப்பணன் ஆகியோர் தீரன் சின்னமல சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய செங்கோட்டையன், பவானிசாகர் அணைக்கு தற்போது கூடுதலாக தண்ணீர் வரும் நிலையில், அத்திகடவு அவினாசி நீரேற்று திட்டத்தை அரசு உடனடியாக தொடங்க வேண்டும் என வலியுறுத்தினார்.
60 ஆண்டு கால கனவு திட்டமான அத்திக்கடவு அவினாசி திட்டம் அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்டு 95 சதவீத பணிகள் முடிக்கப்பட்டது. தற்பொது திமுக ஆட்சியில் 3 ஆண்டுகளாகியும் இன்னும் முடிக்கப்படவில்லை. இந்த திட்டத்தை தொடங்கி விரைவில் தண்ணீர் வழங்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்..
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..