செப்டம்பர் மாத வரையிலான ஜிஎஸ்டி வரி வசூல் விவரம் வெளியாகியுள்ளது. கடந்த மாதம் ஜிஎஸ்டி வசூல் இந்தியாவில் 26%, தமிழக அளவில் 10 % உயர்ந்துள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. இந்த நடப்பு ஆண்டில் 7வது முறையாக மாத கால ஜிஎஸ்டி வரி உயர்ந்துள்ளது. கடந்த செப்டம்பர் மாதம் ஜிஎஸ்டி வரி 1,47,686 கோடியாக உயர்ந்துள்ளது. இது கடந்த செப்டம்பர் மாதத்துடன் ஒப்பிடுகையில் 26% இது அதிகமாகும்.
இதில் கடந்த மாத ஜிஎஸ்டி வசூல் தமிழகத்தில் இருந்து 8,637 கோடி உயர்ந்துள்ளது. இது கடந்த ஆண்டை விட ஒப்பிடுகையில் 10% அதிகமாகும் உள்நாட்டு பரிவர்த்தனைகளின் வருவாய் 22% அதிகரித்தாலும் மாநிலங்கள் முழுவதும் காணப்படும் வேறுபாடுகள் அதிகளவு காணப்படுகிறது. தமிழகத்தில் 10 %, ஆந்திரப் பிரதேசம் 21% வளர்ச்சியுடன், அதைத் தொடர்ந்து குஜராத்தில் 16%, ஒடிசாவில் 13% பின்தங்கியுள்ளது.
செப்டம்பர் 2022 வரையிலான ஜிஎஸ்டி வருவாயில் வளர்ச்சி கடந்த ஆண்டு இதே கால ஆண்டில் 27% ஆக உள்ளது. இது தொடர்ந்து மிக அதிகம் என நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.