காங்கிரஸ் கட்சியின் தலைவர் தேர்தல் வருகிற 17- ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான மல்லிகார்ஜூன கார்கே காங்கிரஸ் தலைவர் தேர்தலில் போட்டியிட முடிவு செய்தார்.
அவரை தொடர்ந்து சி தரூர் போட்டியிட விருப்பம் தெரிவித்தார். இதற்கான வேட்பு மனு தாக்கல் செய்துள்ள சசி தரூர் கட்சித் தலைவர் தேர்தலில் தனக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகிறார்.
இந்நிலையில் மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவராக இருக்கும் மல்லிகார்ஜூன கார்கே அப்பதவியில் இருந்து விலகியதால் அவருடைய பதவியானது திக் விஜய் சிங் அல்லது சிதம்பரத்துக்கு வழங்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனால் மல்லிகார்ஜூன கார்கே தனது மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டியிருக்கும் என கூறப்பட்டது. அதன்படியே மல்லிகார்ஜூன கார்கே மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவர் பதவியில் இருந்து விலகினார்.
மாநிலங்களவையில் மூத்த உறுப்பினர்களாக உள்ள ப.சிதம்பரம் மற்றும் திக் விஜய் சிங் ஆகியோர் இதற்கான போட்டியில் முன்னணியில் இருப்பதாக கூறப்படுகிறது. தற்போது மக்களவையில் காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருக்கும் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி யும் மேற்கு வங்காள மாநிலத்தை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.