ஹெல்தியான ஈவினிங் ஸ்நாக்ஸ்..!
தேவையான பொருட்கள்:
ரவை 1 கப்
நாட்டு சர்க்கரை 1/2 கப்
தேங்காய் 1/2 கப்
ஏலக்காய் 3
தண்ணீர் 1 1/2 கப்
பொட்டுகடலை 1/2 கப்
உப்பு சிட்டிகை
எண்ணெய் 1 ஸ்பூன்
செய்முறை:
ஒரு மிக்ஸி ஜாரில் ஒரு கப் ரவை சேர்த்து நன்றாக நைசாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
ஒரு ஃபேனை அடுப்பில் வைத்து அதில் ஒன்றரை டம்ளர் நீர் ஊற்றி அதில் ஒரு சிட்டிகை உப்பு, எண்ணெய் ஒரு ஸ்பூன் சேர்த்து கொதிக்க வைக்கவும்.
தண்ணீர் கொதி வந்ததும் அடுப்பை அணைத்து அதில் அரைத்த ரவை சேர்த்து நன்றாக கிளறி கலந்துக் கொள்ள வேண்டும்.
பின் அடிப்பை பற்றவைத்து மிதமான தீயில் கிளறிக் கொண்டே இருக்கவும்.
மாவு நன்றாக திரண்டு வந்ததும் அடுப்பை அணைத்து மாவினை மற்றொரு பாத்திரத்திற்கு மாற்றி ஆறவைக்கவும்.
ஒரு மிக்ஸி ஜாரில் பொட்டுகடலை சேர்த்து அரைத்துக் கொள்ள வேண்டும்.
அதனை ஒரு பாத்திரத்திற்கு மாற்றி கொள்ள வேண்டும்.
அதே மிக்ஸி ஜாரில் நாட்டுசர்க்கரை அரை கப், தேங்காய் துருவல் அரை கப், 3 ஏலக்காய் சேர்த்து அரைத்துக் கொள்ள வேண்டும்.
அரைத்ததை பொட்டுகடலை மாவில் சேர்த்து நன்றாக கலந்துக் கொள்ளவும்.
ஆற வைத்த ரவை மாவை கைகளால் சப்பாத்தி மாவு போல பிசைந்து கொள்ளவும்.
சப்பாத்தி கல்லில் சிறிது எண்ணெய் தடவி பிசைந்தை மாவை வைத்து நன்றாக தேய்த்துக் கொள்ளவும்.
பின் அதன் மேல் அரைத்த சர்க்கரை கலவையை கைகளால் பரப்பி தேய்த்து விடவும்.
பின் மாவின் ஓரங்களை அப்படியே மடித்து ரோல் செய்து கொள்ள வேண்டும்.
கடைசியாக இனிப்பு வெளியே வராதபடி மாவினை மூடிக் கொள்ளவும்.
இட்லி பாத்திரத்தில் நீர் சேர்த்து இந்த ரோலை வைத்து பத்து நிமிடங்களுக்கு வேகவைத்து எடுத்து ஒரு தட்டில் வைக்கவும்.
பின் கத்தி கொண்டு அதனை அப்படியே வட்டமாக வெட்டிக் கொள்ள வேண்டும்.
அவ்வளவுதான் ஸ்நாக்ஸ் தயார்.