பதவியை ராஜினமா செய்த மோகன்லால்.. அதிர்ச்சியில் திரைத்துறையினர்..!
கேரள திரைப்படத்துறையில் பாலியல் குற்றங்கள் நடப்பதாக ஓய்வு பெற்ற நீதிபதி ஹேமா அறிக்கை சமர்ப்பித்த நிலையில் இந்த பிரச்சனை மலையாள திரையுலகினர் மத்தியில் பெரும் பரபரப்பையும் பேசு பொருளாகவும் வலம் வந்து கொண்டிருகின்றது.
அந்த அறிக்கை வெளியானதற்கு பின் பல நடிகைகள் தாமாக முன்வந்து தங்களும் பாலியல் துன்புறுத்தல்களுக்கு ஆளானதாக கூறிவருகின்றனர். அதன்படி ரேவதி சம்பத் என்ற நடிகை, நடிகர் சங்க பொதுச் செயலாளர் சித்திக் மீது பாலியல் புகார் தெரிவித்தார். இதைத்தொடர்ந்து சித்திக் தனது பதவியை ராஜினாமா செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தநிலையில் மலையாள திரைப்படம் நடிகர்கள் சங்கத்தின் ப்ரெசிடண்ட் பொறுப்பில் இருக்கும் நடிகர் மோகன்லால் பாலியல் குற்ற சம்பவத்திற்கு எந்த கருத்தும் தெரிவிக்காமல் மவுனம் காத்து வந்தது அவரது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை அளித்தது. அதனைதொடர்ந்து இன்று மோகன்லால் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
இவர் மட்டுமல்லாமல் நடிகர் சங்கத்தில் இருக்கும் 17 நிர்வாகிகளும் அவர்களது ராஜினாமா கடித்தத்தை சமர்பித்து ராஜினாமா செய்துள்ளனர். இது கேரளா ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-பவானி கார்த்திக்