டுடே ஸ்நாக் தித்திக்கும் பலாப்பழம் ஃபர்பி…
பலாச்சுளை – 20
தேங்காய் – 1
வெல்லம் – 250 கிராம்
நெய் – 2 ஸ்பூன்.
பலாச்சுளையை ஒரு மிக்ஸியில் போட்டு அரைத்துக் கொள்ள வேண்டும்.
ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து வெல்லத்தை போட்டு தண்ணீர் ஊற்றி கொதிக்க வைத்து கரைந்ததும் வடிகட்டி எடுத்துக் கொள்ள வேண்டும்.
பின் ஒரு நாண்ஸ்டிக் வாணலை அடுப்பில் வைத்து அதில் துருவிய தேங்காயை போட்டு பொன்னிறமாக வறுக்கவும்.
பின் அந்த தேங்காயுடன் அரைத்த விழுதை சேர்த்து நன்றாக கிளற வேண்டும்.
மேலும் அதில் சர்க்கரை கலவையை கலந்து நன்றாக கிளற வேண்டும். இது கெட்டியாகும் சமையத்தில் இறக்கி விடவும்.
பின் ஒரு அகலமான பாத்திரத்தில் நெய் தடவி அந்த கலவையை கொட்டி ஆற வைத்து வெட்டி சாப்பிடலாம்.